இராமன் எத்தனை இராமனடி !
இராமன் என்பது மறவனப்பு (இதிகாச)ப் பெயர். இராமாயணக் கதையின் நாயகன். இராமம் என்றால் தமிழில் அழகு, ஆசை, விரும்பத்தக்கது என்று பொருள். இராமன் என்றால் அழகு மிக்கவன், அதாவது எழிலன் என்று பெயர். இராமன் திருமாலின் தோற்றரவு (அவதார) வடிவங்களில் ஒன்று என்ற கதை அனைவருக்கும் தெரியும்.
இராமன் என்ற பெயரின் அடிப்படையில் பல பெயர்கள்
தமிழகத்தில் குழந்தைகளுக்கு வைக்கப்படுகின்றன. பெரும்பாலான பெயர்கள்
சமற்கிருதத்தில் அமைந்தவை. இராமன் என்ற பெயர் தாங்கிய இறைவழிச் சமற்கிருதப் பெயர்களையும், அவற்றுக்கு
இணையான அல்லது பொருத்தமான தமிழ்ப்
பெயர்களையும் அறிவோமா !
--------------------------------------------------------------------------------------
இராமகிருஷ்ணன்.........= எழில்மாலன்
இராமசாமி........................= எழிலரசன்
இராமசுப்பு.........................= தூயமணி
இராமச்சந்திரன்..............= எழில்நிலவன்
இராமசேது…………….....…= செவ்வெழிலன்
இராமதாஸ்..................... = எழிலடியார்
இராமநாதன்................. = எழிலேந்தல்
இராமமூர்த்தி................. = எழிலண்ணல்
இராமராஜன்................ . = எழிலரசன்
இராமலிங்கம்............... = எழில்வாணன்
இராமன் (அழகன்)........ = எழிலன்
இராமஜெயம்.................. = வெற்றியழகன்
இராமாநுஜன்.................. = எழிலடியார்
இராமாமிர்தம்................ = எழிலமுதன்
இராமு................................ =
எழிலன்
காகுத்தன்......................... =
எழிலன்
கோதண்டபாணி............ = வில்லாளன்
கோதண்டராமன்........... = வில்லாளன்
ஜெயராமன்.......................=
வெற்றியழகன்
சீத்தாராமன்......................= சீதாமணாளன்
கோசலராமன்...................= இளவரசன்
தசரதராமன்......................=
பைந்தேரழகன்
அனந்தராமன்...................= பேரெழிலன்
சிவராமன்...........................= இறையெழிலன்
------------------------------------------------------------------------------------
(இராமம் = எழில்); (கிருஷ்ணன் = மாலன்) (சாமி=தலைவன்,அரசன்) (சுப்பு=தூயவன்) தாஸ் = அடியார்; மூர்த்தி = அண்ணல் ; லிங்கம் = இலங்கம் (லிங்க வடிவில் வாழ்பவன் = வாணன்) கோதண்டம் = வில் ;அனந்தம் = பெரிய ; தசரதன்= பத்துத் தேர்
(பைந்தேர்) உடையவன் = சிவம் = சிவப்பு
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 15]
{29-05-2022}
--------------------------------------------------------------------------------------
![]() |
சீத்தாராமன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக