பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

பெயர் விளக்கம் (30) ஸ்ரீகண்டன் - பெயரின் பொருள் என்ன ?

 சிவபெருமானுக்குப் பெயர்தான் ஸ்ரீகண்டன் !

 --------------------------------------------------------------------------------------

சிவபெருமான்  பல்வகைப் புராணங்களாலும், இதிகாசங்களாலும் பல்வேறு பெயர்களால் விளிக்கப்பட்டார். பெரும்பாலும் சமற்கிருதப் பெயர்களாகவே அவை அமைந்தன. சிவபெருமானின் பெயர்களை ஆண் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழும் போக்கு மக்களிடையே தோன்றின. பெயரின் பொருளை அறியாமலேயே குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வுகள் நடந்துவருகின்றன !

 

ஸ்ரீகண்டன் என்றால் சிவன் என்று பொருள். ஸ்ரீ என்னும் சொல்லுக்கு திரு, திருமகள், அழகு, நீலம் என்றெல்லாம் பொருளுண்டு. ஸ்ரீ = நீலம்;  கண்டன் = கழுத்தையுடையவன்; அதாவது நீலகண்டன் என்று பொருள் ; சிவன் என்பதைக் குறிக்கும் பல்வேறு சமற்கிருதப் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------

  1. அம்பிகாபதி..............................= அழல்வண்ணன்
  2. அர்த்தநாரி.................................= மங்கைபங்கன்
  3. அர்த்தநாரீஸ்வரன்..............= மாதங்கன்
  4. அவிநாசி.............................../....= கயிலைவாணன்
  5. அவிநாசிலிங்கம்..................= சிவச்செல்வன்
  6. ஆலகண்டன்..........................= நஞ்சுண்டான்
  7. ஆனந்த நடராஜன்..............= இன்பக் கூத்தன்
  8. ஈஸ்வரன் (உடையான்).............= திருச்செல்வன்
  9. ஏகாம்பரம்...............................= ஆடல்வல்லான்
  10. கங்காதரன்.............................= கங்கைகொண்டான்
  11. கல்யாணசுந்தரன்...............= மணவழகன்
  12. குஞ்சிதபாதம்.........................= கூத்தரசன்
  13. சச்சிதானந்தன்......................= மெய்யறிவின்பன்
  14. சதாசிவன் (நல்லான்)...............= அருள்நம்பி
  15. சந்திரசூடன்............................= பிறைசூடி
  16. சந்திரசேகரன்.......................= மதிசூடி
  17. சந்திரமௌலி.......................= பிறைசூடி
  18. சபாநாயகம்............................= அம்பலவாணன்
  19. சபாநாதன்...............................= தில்லைவாணன்
  20. சபாபதி......................................= மன்றவாணன்
  21. சர்வேஸ்வரன்.......................= பெருந்தேவன்
  22. சாம்பசிவன்.............................= அம்மையப்பன்
  23. சாம்பமூர்த்தி...........................= அம்மையப்பன்
  24. சுந்தரன்......................................= மெய்யழகன்
  25. சுயம்புலிங்கம்........................= முகிழன்
  26. சோமநாதன்.............................= பிறைசூடி
  27. தட்சிணாமூர்த்தி....................= தென்முகநம்பி
  28. தட்சிணாமூர்த்தி....................= தென்னவன்
  29. நடராஜன்....................................= கூத்தபிரான்
  30. பக்தவத்சலம்...........................= அடியார்க்கு நல்லார்
  31. பசுபதி (பசு=உயிர், கோ).................= கோவேந்தன்
  32. பஞ்சநதன்..................................= ஐயாறண்ணல்
  33. பஞ்சாட்சரன் (ஐந்தெழுத்தன்).....= அம்பலக்கூத்தன்
  34. பரஞ்சோதி.................................= பேரொளி
  35. பரமசிவன்...................................= விண்ணரசு
  36. பரமன்............................................= தீவண்ணன்
  37. பரமேஸ்வரன்...........................= பெருந்தேவன்
  38. பிரஹதீஸ்வரன்........................= பெருவுடையார்
  39. பினாகபாணி...............................= வில்லாளன்
  40. மகாதேவன்..................................= பெருந்தேவன்
  41. மஹேஸ்வரன்...........................= கோப்பெருந்தேவன்
  42. மாத்ருபூதம்..................................= தாயுமானவன்
  43. மார்க்கசகாயம்...........................= நன்னெறிநம்பி
  44. வன்மீகநாதன்.............................= புற்றுறைநம்பி
  45. வில்வநாதன்................................= வில்வநேயன்
  46. விஸ்வநாதன்...............................= பெருந்தேவன்
  47. விஸ்வலிங்கம்............................= வானவரம்பன்
  48. ஜகதீசன்...........................................= உலகநம்பி
  49. ஜகதீஸ்வரன்.................................= பார்வேந்தன்
  50. ஸ்ரீகண்டன் ( சிவன் ).......................= அந்திவண்ணன்
  51. ஸ்ரீநாத்................................................= பிறைசூடி

---------------------------------------------------------------------------------------

(01)(அம்பிகை = கணவன்)   (02)(அர்த்த = பாதி) (நாரி = மங்கை) (04) அவிநாசி = சிவன்;    (06)(ஆலம் = நஞ்சு)  (08)(ஈஸ்வரன் = உடையவன்)  (09)(ஏகாம்பரன் = ஒற்றை உடை அணிந்தவன்)  (10)(தரன் = அணிந்தவன்)  (11)(கல்யாணம் = திருமணம்)   (சுந்தரம் = அழகு)   (12)(குஞ்சிதம் = தூக்கிய, வளைந்த) (17) மௌளி = முடி; (18)(சபா = அம்பலம்;   (22)(சாம்பவி = அம்மை)   (25)(சுயம்பு = தான்தோன்றி) (26) (சோமம் = நிலவு;  (28)(தட்சிணம் = தெற்கு)  .(29)(நடம் = கூத்து)  (30.(பக்தர் = அடியார்) (39)(பினாகம் = வில்) (42)(மாத்ரு = தாய்)    (43)(மார்க்கம்=வழி) (சகாயம் = உதவி)   (44)(வன்மீகம் = புற்று) (46)(விஸ்வம் = பெரிய) (48)(ஜகம் = உலகம்) (51) (நாத்= நாதன் = தலைவன், சிவன்)            

 

---------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

 வை.வேதரெத்தினம்,

 (vedarethinam70@gmail.com)

 ஆட்சியர்,

 தமிழ்ப் பெயர்வலைப்பூ

 [திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

 {31-05-2022}

---------------------------------------------------------------------------------------

ஸ்ரீநாத்

திங்கள், 30 மே, 2022

பெயர் விளக்கம் (29) அருணாச்சலம் - பெயரின் பொருள் என்ன ?


மலை என்னும் சொல் பண்டைக் காலத்திலிருந்தே தமிழில் வழக்கில் இருந்து வருகிறது. “மலை வான் கொள்கஎன உயர் பலி தூஉய்என்பது புறநானூறு (பாடல்:143). ”மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்என்பது குறுந்தொகை (பாடல்:203) !

 

சிலம்பு, வரை, ஓங்கல் போன்ற தமிழ்ச் சொற்களும் மலையைக் குறிப்பனவே. கி.பி.10-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பல்லவர்கள், இராசராச சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக்  காலத்தில் தமிழகத்தில் வடமொழியின் மேலாண்மை தலையெடுக்கத் தொடங்கியது.  மலை என்ற சொல்கிரிஎன்றும்அசலம்என்றும் புதிய உருவில் புழங்கத் தொடங்கின !

 

இதன் விளைவாக மலைகளின் பெயர்களிலும், மலைகளின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டிவந்த மாந்தப் பெயர்களிலும்  கிரி” “அசலம்” ”சைலம்போன்றவை ஒட்டிக்கொண்டன. பழமலை என்னும் பெயர்விருத்தகிரிஆயிற்று. சிவன்மலைதீர்த்தகிரிஆயிற்று !

 

வேங்கடமலை வேங்கடாசலம்ஆயிற்று. மருதமலைமருதாசலம்ஆயிற்று. பொன்மலைசோணாசலம்எனப் புதுப்பெயர் சூட்டிக்கொண்டது. தமிழை அழிக்கும் முயற்சியில் தமிழக மன்னர்களின் துணையை மறைமுகமாகப் பெற்று ஆரியர்கள் முனைப்பாக ஈடுபடலாயினர் !

 

ஆரியர்களின் பண்பாட்டுப் படையெடுப்பால் இன்று தமிழகத்து மாந்தப் பெயர்களில் 90% அளவுக்கு வடமொழிப் பெயர்களாகவே அமைந்துள்ளன. தமிழகத்து மலைகள் வடமொழிப் பெயர்களால் அழைக்கப்பெறும் நிலை நிலவுகிறது. நீலகிரி, வெள்ளியங்கிரி, தீர்த்தகிரி, கோத்தகிரி, கிருஷ்ணகிரி, சூலகிரி போன்ற பெயர்கள் அவற்றுக்கு எடுத்துக்  காட்டுகள் !


அருணன் என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் செந்நிறமான கோள். ஆகையால் அருணமலை என்பது தமிழில் “செம்மலை” என்று  அழைக்கப்பெறும். ஆனால் செம்மலை என்னும் பெயர் நிலைபெறாமல் அருணமலை என்னும் சொல் அருணகிரி என்றும் அருணாச்சலம் என்றும் வடமொழிப் பின்னொட்டுடன் வழங்கப் பெறலாயிற்று !

 

அசலம்அல்லதுகிரிஎன்ற  சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டுள்ள மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கான அழகிய தமிழ்ப்  பெயர்களையும் பார்ப்போமா !

 

------------------------------------------------------------------------------------


அருணாச்சலம் (அருணன்=சூரியன்).= செம்மலை

வேதாச்சலம் (வேதம்=மறை)...............= மறைமலை

சோணாச்சலம் (சோணம்=பொன்)....= பொன்மலை

சேஷாச்சலம் (சேஷன்=இளையோன்)..................= இளங்குன்றன்

தணிகாச்சலம்......................................= தணிகைமலை

வேங்கடாச்சலம் (வேங்கடம்=வடக்குமலை).... = வடமலை

ஸ்ரீசைலம் (ஸ்ரீ = திரு).............................= திருமலை

விருத்தாச்சலம் (விருத்தம்=முதுமை)........... = திருமுதுகுன்றம்

மருதாச்சலம் (மருதம் = மருத மரம்)............... = மருதமலை

இமாச்சலம் (இமம்=பனி)......................= பனிமலை

மந்திராச்சலம் (மந்திரம்= மறை).........= மறைமலை

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

-------------------------------------------------------------------------------------

அருணாச்சலம்

பெயர் விளக்கம் (28) லிங்கம் - பெயரின் பொருள் என்ன ?

லிங்கம்என்பது எதைக் குறிக்கிறது ?

 -----------------------------------------------------------------------------------


சிவபெருமானை லிங்கம் வடிவில்    கோயில்களில்    நிறுவி      மக்கள் வழிபடுகின்றனர். லிங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு     இலங்கம் என்ற தமிழ்ச் சொல்லை பாவாணர் அவர்கள்  அறிமுகப்படுத்தி உள்ளார்.

 

இந்த லிங்கம் என்ற சொல் தனித்து நின்றோ அல்லது பிற சொற்களுடன் இணைந்தோ மக்கட் பெயர்களாகி குழந்தைகளுக்குச் சூட்டப் பெறுவதைக் காண்கிறோம். லிங்கம் என்னும் முன்னொட்டு அல்லது பின்னொட்டுடன் பல பெயர்கள் வழங்கிவருகின்றன !

 

லிங்கம்என்ற சொல்லுக்கு அடையாளம், சிவனுரு, விழியின் நடுவில் இருக்கும் பாவை; ஆண்குறி எனப் பல பொருள்கள் உள்ளன. பொதுவாக லிங்கம் என்பது சிவனைக் குறிக்கும் ஒரு அடையாளம் அல்லது குறியீடு. லிங்கம் என்பதை முன்னொட்டாகவோ பின்னொட்டகவோ கொண்டு அமைந்துள்ள மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கு இணையான அல்லது இணையில்லாவிடினும் பொருத்தமான  தமிழ்ப் பெயர்களையும் காண்போம் !

 

சொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்வது சிறப்பாக இராது. பூவராகன் என்றால் நிலப்பன்றி என்று பொருள். (பூ=நிலம்; வராகம்=பன்றி)  நிலப் பன்றி என்று யாருக்காவது பெயர் சூட்ட முடியுமா ? வராக அவதாரம் எடுத்த திருமால் என்னும் வகையில் பூவராகன் என்றால் மாலன் என்று மொழியாக்கம் செய்யலாம்.  பூவராகன் என்ற சொல்லின் பொருளை  மாலன் என்ற சொல் எதிரொலிக்க வில்லையே என்று யாரும் கேட்கலாகாது !

 

இனி, பெயர்ப் பட்டியலைப் பார்ப்போம் !

 

----------------------------------------------------------------------------------------

 

அமிர்தலிங்கம் (அமிர்தம்=அமுது)...........= அமுதன்

ஆத்மலிங்கம் (ஆத்மா = உயிர்).................= உயிரொளி

இராமலிங்கம் (இராமம்=எழில்)................= எழிலரசு

ஓமலிங்கம் (ஓமம்=வேள்வி)........................= வேள்விச்செல்வன்

கனகலிங்கம் (கனகம்=தங்கம்).................= பொற்செல்வன்

காத்தலிங்கம் (காத்தல்=புரப்பு)................= மாமன்னன்

குற்றாலலிங்கம்(குறுமை+ஆல்+லிங்கம்)...= ஆலமர்செல்வன்.

கூடலிங்கம் (கூடல்=மதுரை).......................= கூடலரசன்

கூத்தலிங்கம் (கூத்து=நடனம்)....................= கூத்தபிரான்

சாந்தலிங்கம் (சாந்தம்=பொறை).............= பொறையண்ணல்

சுந்தரலிங்கம் (சுந்தரம்=அழகு)..................= அழகரசு

சொக்கலிங்கம் (சொக்கன்=அழகன்).......= எழிலரசு.

சொர்ணலிங்கம் (சொர்ணம்=பொன்)......= பொற்செல்வன்

சோமலிங்கம் (சோமம்=சந்திரன்)..............= மதியொளி

ஞானலிங்கம் (ஞானம் = அறிவு)..................= அறிவுக்கரசு

தருமலிங்கம் (தருமம்=அறம்).......................= அறவாணன்

நாகலிங்கம் (நாகம்=முகில்)..........................= முகிலரசு

பர்வதலிங்கம் (பர்வதம்=மலை)...................= சிலம்பரசு

பூதலிங்கம் (பூதம்=ஐம்பூதங்கள்).................= உலகநம்பி

பூர்ணலிங்கம்(பூர்ணம்=நிறைவு).................= நிறைமதியன்

பூவலிங்கம் (பூவன்=பூவிலுள்ளவன்)...........= பூவாணன்

பொன்னுலிங்கம் (பொன்னு=பொன்)..........= பொன்வண்ணன்

மகாலிங்கம் (மகா=பெரிய)...........................= பேரரசு

லிங்கன் ( லிங்க வடிவன் )........................= திருவிலங்கன்

லிங்குசாமி (லிங்கம்=இலங்கம்)...................= மாவிலங்கன்

லிங்கோற்பவன் (உற்பவம்=முகிழ்ப்பு)........= முகிழன்

வேதலிங்கம் (வேதம்=மறை)..........................= மறைமணி

வைத்தியலிங்கம் (உறை = மருந்து)......= உறைவாணன்

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு, 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

------------------------------------------------------------------------------------

லிங்கம்

ஞாயிறு, 29 மே, 2022

பெயர் விளக்கம் (27) இராமன் - பெயரின் பொருள் என்ன ?

இராமன் எத்தனை இராமனடி !

 -----------------------------------------------------------------------------------

இராமன் என்பது மறவனப்பு (இதிகாச)ப் பெயர். இராமாயணக் கதையின் நாயகன். இராமம் என்றால் தமிழில் அழகு, ஆசை, விரும்பத்தக்கது  என்று பொருள். இராமன் என்றால் அழகு மிக்கவன், அதாவது எழிலன் என்று பெயர். இராமன்  திருமாலின் தோற்றரவு (அவதார) வடிவங்களில் ஒன்று என்ற கதை அனைவருக்கும் தெரியும். 


இராமன் என்ற பெயரின் அடிப்படையில் பல பெயர்கள் தமிழகத்தில் குழந்தைகளுக்கு வைக்கப்படுகின்றன. பெரும்பாலான பெயர்கள் சமற்கிருதத்தில் அமைந்தவை. இராமன் என்ற பெயர் தாங்கிய இறைவழிச் சமற்கிருதப்  பெயர்களையும், அவற்றுக்கு இணையான  அல்லது பொருத்தமான தமிழ்ப் பெயர்களையும் அறிவோமா !

 

--------------------------------------------------------------------------------------

 

இராமகிருஷ்ணன்.........= எழில்மாலன்

இராமசாமி........................= எழிலரசன்

இராமசுப்பு.........................= தூயமணி

இராமச்சந்திரன்..............= எழில்நிலவன்

இராமசேது…………….....…= செவ்வெழிலன்

இராமதாஸ்..................... = எழிலடியார்

இராமநாதன்.................  = எழிலேந்தல்

இராமமூர்த்தி................. = எழிலண்ணல்

இராமராஜன்................ . = எழிலரசன்

இராமலிங்கம்...............  = எழில்வாணன்

இராமன் (அழகன்)........ = எழிலன்

இராமஜெயம்.................. = வெற்றியழகன்

இராமாநுஜன்.................. = எழிலடியார்

இராமாமிர்தம்................ = எழிலமுதன்

இராமு................................ = எழிலன்

காகுத்தன்......................... = எழிலன்

கோதண்டபாணி............ = வில்லாளன்

கோதண்டராமன்........... = வில்லாளன்

ஜெயராமன்.......................= வெற்றியழகன்

சீத்தாராமன்......................= சீதாமணாளன்

கோசலராமன்...................= இளவரசன்

தசரதராமன்......................= பைந்தேரழகன்

அனந்தராமன்...................= பேரெழிலன்

சிவராமன்...........................= இறையெழிலன்

 

------------------------------------------------------------------------------------

 

(இராமம் = எழில்); (கிருஷ்ணன் = மாலன்) (சாமி=தலைவன்,அரசன்)  (சுப்பு=தூயவன்)  தாஸ் = அடியார்; மூர்த்தி = அண்ணல் ; லிங்கம் = இலங்கம் (லிங்க வடிவில் வாழ்பவன் = வாணன்) கோதண்டம் = வில் ;அனந்தம் = பெரிய ; தசரதன்= பத்துத் தேர் (பைந்தேர்)  உடையவன் =  சிவம் = சிவப்பு

 

-------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 15]

{29-05-2022}

--------------------------------------------------------------------------------------

சீத்தாராமன்