பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 27 ஏப்ரல், 2022

பெயர் விளக்கம் (12) காயத்திரி - பெயரின்பொருள் என்ன ?

கல்விக் கடவுளை அறிந்தவர்கள் காயத்திரியை அறிவாரா ?

 --------------------------------------------------------------------------------------

கல்விக் கடவுள் சரஸ்வதி தேவி என்பார்கள். வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்து, கையில் வீணையுடன் காட்சி தரும் சரஸ்வதி, பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். கலைமகள், பனுவலாட்டி, காயத்திரி, ஞானமூர்த்தி,  பிராமி, வெள்ளைமெய்யாள், வெண்சலசமுற்றாள், பாரதி, இசைமடந்தை, அயன் மனைவி, வாக்காள், வாணி எனப் பலவாறு விளிக்கப்படுவது வழக்கம். தமிழிலும், சமஸ்கிருத பொழியிலும் அமைந்துள்ள அப்பெயர்களைப் பார்ப்போமா !

-------------------------------------------------------------------------------------

காயத்திரி............................ = கலைமகள்

காயத்திரிதேவி..................= நாமகள்

சங்கீதா.................................= இசைமடந்தை

சரசு.........................................= மலர்மகள்

சரஸ்வதி................................= பொய்கைப்பூவை

சாரதா....................................= கலைவாணி

சாரதாதேவி........................= நாவரசி

ஞானமூர்த்தி.......................= அறிவழகி

பாரதி.....................................= கலைமகள்

வாகீஸ்வரி.......................... = நாமகள்

வாணி....................................= இசைவாணி

வாணிஸ்ரீ..............................= இசையரசி

வித்யா...................................= கலைமகள்

வித்யாவதி...........................= கலைச்செல்வி

வெண்சலசமுற்றாள்......= தாமரைச்செல்வி

ஸ்ரீவித்யா..............................= கலையரசி

 -------------------------------------------------------------------------------------

 

04. சரசு = பொய்கை, நீரோடை, குளம்; சரசுவதி = பொய்கையில் வாழ்பவள், அதாவது பொய்கையில் உள்ள தாமரைப்பூவில் வாழ்பவள்;  =   11. வாணி = வாழ் + ந் + இ = வாழ்ணி = வாணி =( வாழ்பவள், குடிகொண்டவள்; கலைவாணி = கலைகள் தன்னிடம் குடிகொண்டவள்)  13. (வித்தை=கலை) வித்யா = கல்வி, வதி = தன்னிடம் வாழச் செய்பவள்; வித்யாவதி = கல்வி தன்னிடம் வாழச் செய்பவள் 15. வெண்சலசம் = வெள்ளைத் தாமரை.

 

-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 14]

{27-04-2022}

---------------------------------------------------------------------------------

கலைவாணி



ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

பெயர் விளக்கம் (11) ஜீவக்குமார் - பெயரின் பொருள் என்ன ?

பொருள் தெரியாத பெயரோ ஜீவக்குமார் ?


குமார் அல்லது குமரன் என்பதற்கு மகன், முருகன், அழகன், விடலை, இளைஞன், ஆண்மகன், இளையோன், வயிரவன் எனப் பல பொருள்கள் உள்ளன.. தமிழகத்தில் மக்களிடையே குமார் என்னும் சொல்லின் அடிப்படையில் பல பெயர்கள் புனையப்பட்டு, குழந்தைகளுக்குச் சூட்டப்படுகின்றன. அவற்றுள் சில தமிழ்ப் பெயர்களாகவும், பல வடமொழிப் பெயர்களாகவும் உள்ளன. இவ்வாறு வழக்கிலுள்ள பெயர்களையும், அவற்றுக்கு இணையான தூய தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !

 

-------------------------------------------------------------------------------------

 

அட்சயகுமார் (அட்சயன்=இறைவன்)...= இறையழகன்

அனந்தகுமார் (அனந்தம்=பொன்).........= பொற்செல்வன்

ஆனந்தகுமார் (ஆனந்தம்=இன்பம்)......= இனியவன்

இந்திரகுமார் (இந்திரன்=வானவர் கோன்)= வானவர்செல்வன்

இராம்குமார் (இராமம்=அழகு)...............= எழிலரசு

இராஜ்குமார்  (ராஜ்=அரசன்)..................= இளவரசன்

கமலகுமார் (கமலம்=தாமரை)...............= தாமரைச்செல்வன்

குமார்  (குமார்=அழகன்)............................= எழிலன்

சந்திரகுமார்  (சந்திரன்=நிலவு).............= நிலவழகன்

சிவகுமார் (சிவன்=சிவந்தவன்)...............= செவ்வெழிலன்.

சூரியகுமார்   (சூரியன்=பரிதி)...............= பரிதிச்செல்வன்

சொர்ணகுமார் (சொர்ணம்=பொன்).....= பொற்செல்வன்

நரேஷ்குமார் (நரேஷ்=அரசன்)..............= இளவரசன்

பங்கஜகுமார் (பங்கஜம்=தாமரை)........= தாமரைச்செல்வன்

பத்மகுமார் (பத்மம்=தாமரை)................= தாமரைச்செல்வன்

பரணிகுமார் (பரணி=கூத்து)..................= கூத்தரசன்  

பாலகுமார்  (பாலன்=இளைஞன்)..........= இளவழகன்

மணிக்குமார் (குமார்=எழிலன்)............= மணியெழிலன்

முத்துக்குமார் (குமார்=செல்வன்).........= முத்துச்செல்வன்

வீரகுமார் (வீரம்=அடல்)..........................= அடலரசு

ஜீவகுமார் (ஜீவன்= வைடூரியம்).............= மணியெழிலன்

 

 -------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 11]

{24-04-2022}

--------------------------------------------------------------------------------------





வியாழன், 21 ஏப்ரல், 2022

பெயர் விளக்கம் (10) ஞானராஜ் - பெயரின் பொருள் என்ன ?

ஞானராஜ் அவர்களே ! உங்கள் பெயருக்கு என்ன பொருள் என்று சொல்ல முடியுமா ?

 

ஞானம் என்ற சொல்லுக்கு அறிவு, கல்வி, தெளிவு, நல்லொழுக்கம் என்று பல பொருள்கள் உள்ளன ! இச்சொல் வடமொழிச் சொல் என்று பலரும் கருதுகிறார்கள். இது தவறு ! ஞானம் தமிழ்ச் சொல்லே ! தமிழர்களின் தாராள மனம் காரணமாக வேறு பல வடமொழிப் பெயர்களுக்கு இடம் தந்துவிட்டோம். தமிழில் பெயர் வைப்பது தமிழர்களுக்குத் தாழ்வாகத் தோன்றுகிறது போலும் !

 

ஞானம் என்ற பெயருடன் முன்னொட்டு, பின்னொட்டாக சில சொற்களைச் சேர்த்து மாந்தப் பெயர்கள் பல வழக்கில் உள்ளன. அவற்றுள் ஒருசில தரப்பட்டுள்ளன. அப்பெயர்களுக்கு இணையான அழகிய தமிழ்ப் பெயர்கள் தரப்பட்டுள்ளன.  தமிழ் ஆர்வலர்கள் தங்கள் குழந்தைகளுக்கும், தங்கள் பெயரன் பெயர்த்திகளுக்கும் இனிய தமிழ்ப் பெயர்களைத் தேர்வு செய்து சூட்டுவார்களாக!

 

--------------------------------------------------------------------------------------

 

ஞானம் (ஞானம் = கல்வி)..................= கல்விக்கரசு

ஞானராஜ் (ஞானம் = அறிவு)............= அறிவுக்கரசு

ஞானசுந்தரம் (சுந்தரம்=அழகு).........= அறிவழகன்

ஞானப்பிரகாசம் (பிரகாசம்=ஒளி)...= அறிவொளி

ஞானமூர்த்தி (மூர்த்தி=தலைவன்)....= அறிவரசு

ஞானவேல் (வேல் = படை)..................= அறிவுவேலன்,

ஞானசௌந்தரி (சௌந்தரம்=அழகு).= அறிவழகி

ஞானகிருஷ்ணன் (கிருஷ்ணன்=திருமால்)....= அறிவுமாலன்

ஞானச்செல்வி (ஞானம்=அறிவு).......= அறிவுச்செல்வி.

ஞானச்செல்வன் (ஞானம்=அறிவு)...= அறிவுடைநம்பி

கலைஞானம் (கலை=பிறை, மதி).....= அறிவுமதி.

திருஞானம் (திரு = அழகு)...................= அறிவழகன்

சிவஞானம் (சிவம்= இன்பம்).............= அறிவின்பன்

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்”வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 08]

{21-04-2022}

--------------------------------------------------------------------------------------


அறிவுமதி

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

பெயர் விளக்கம் (09) வாணன் - பெயரின் பொருள் என்ன ?

 

தமிழ் வாணன் என்பது உங்கள் பெயர் ! வாணன்  என்றால் என்ன  ?

 

வாழ் + ந் + அன் = வாழ்நன் = வாணன். வாணன் என்னும் சொல்லுக்கு வாழ்பவன் என்று பொருள். தமிழ்வாணன் என்றால் தமிழறிவைத்  தன்னிடம் நிரம்பப் பெற்று வாழ்பவன் என்று பொருள். கலைவாணன் என்றால் கலைகளைத் தன்னிடம் நிரம்பவும் பயிலச் செய்து வாழ்பவன் என்று பொருள். வாணன் என்னும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு வழங்கப்படும் பெயர்களைக் காண்போமா !

 

==============================================

 

இராமன் = எழில்வாணன் (இராமம்=எழில்) எழில்மேனி பெற்று வாழ்பவன்)

 

சிவன் = நீலவாணன் (நீல வண்ணக் கறை மிடறு பெற்று வாழ்பவன்) =

 

கோபாலன் = ஆவாணன் (ஆ=பசு) பசு நிரைகளைச் சார்ந்து வாழ்பவன்) 

 

தமிழ்வாணன் = தமிழ்வாணன் (தமிழில் வல்லமை பெற்று வாழ்பவன்)

 

வித்யாபதி = கலைவாணன் (கலைகளில் வல்லமை பெற்று வாழ்பவன்)

 

திருமால் = அலைவாணன் (பாற்கடலில் அலைமீது ஆலிலையில் துயிலும்  கண்ணன்)

 

ரெங்கநாதன் = அரங்கவாணன் (திருவரங்கத்தில் பள்ளி கொண்டு வாழ்பவன்) =

 

கலியபெருமாள் = ஆழிவாணன் (கலி = கடல்) கடல் அலைமீது  பள்ளி கொண்ட பெருமாள் 

 

சமுத்திரம் = கடல்வாணன் (பாற்கடலில் ஆலிலையை இடமாக்கித்  துயிலும்   திருமால்) 

 

கோகுல கிருஷ்ணன் = கோகுலவாணன் (கோகுலத்தில் வாழும் கண்ணன்) 

 

கோபாலகிருஷ்ணன் = ஆகுலவாணன் (ஆநிரை புரந்து வாழும் கண்ணன்)

 

இமயபதி = மலைவாணன் (கயிலை மலையை வாழிடமாகக் கொண்ட  சிவன்) 

 

மருதை ; மருதப்பன் = மருதவாணன் (மருத நிலத்தின் தலைமை ஏற்று வாழும் அரசன்) 

 

சபாநாயகம் = மன்றவாணன் (மன்றம்=சபை) சபையில் எழுந்தருளியுள்ள  நாயகன்) 

 

வனராஜன் = முல்லைவாணன் (முல்லை நிலத்தின் அரியணை ஏற்று வாழும் அரசன்) 

 

கவிராஜன் = பாவாணன் (பாக்கள் இயற்றும் வல்லமை பெற்று வாழ்பவன்) 

 

ஞான மணி. = மதிவாணன் (கூர்த்த மதி பெற்று அறிஞனாக வாழ்பவன்) 

 

------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 06]

{19-06-2022}

-------------------------------------------------------------------------------


வாணன்

திங்கள், 11 ஏப்ரல், 2022

பெயர் விளக்கம் (08) நளினா - பெயரின் பொருள் என்ன ?

உங்கள் தங்கை பெயர் நளினா ! இந்தப் பெயருக்குப் பொருள் தெரியுமா ?

 ------------------------------------------------------------------------------------

தமிழில், தாமரை மலரை முளரி, இறும்பு, அம்புயம் என்றெல்லாம் சொல்கிறோம். சமற்கிருதத்தில் புண்டரீகம், முண்டகம், அரவிந்தம், வனஜம், சலஜம், கமலம், பதுமம், பங்கயம், அம்புஜம், சரோஜம், நளினம் என்றெல்லாம் அழைப்பார்கள். இத்தகைய சமற்கிருதப் பெயர்களின் அடிப்படையில் தோன்றி மனிதர்களிடையே வழங்கி வரும் பெயர்களையும் அவற்றுக்குப் பொருத்தமான புதிய தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !

--------------------------------------------------------------------------------------

 

அம்புஜம் (தாமரை).......................= செந்தாமரை

அரவிந்தன்( பத்மநாபன்)...........= தாமரை வாணன்

அரவிந்தாக்ஷன் (அக்ஷம்=கண்).= தாமரைக் கண்ணன்.

கமலம்(தாமரை)...........................= நறுந்தாமரை

கமலாசனன்...................................= தாமரைச்செல்வன்

கமலவல்லி......................................= தாமரைக்கொடி

கமலி (பத்மாவதி).........................= மலர்ச்செல்வி

கமலஹாசன்(கமல ஆசனன்)...= தாமரைச் செம்மல்

சரோஜா(தாமரை).......................= தாமரைச் செல்வி

சலஜா(ஜலஜா)...............................= தாமரை வாணி

நளினா..............................................= தாமரை மங்கை

நீரஜா.................................................= மலர்ச்செல்வி

பங்கஜம்...........................................= நற்றாமரை

பண்டரிநாதன்(புண்டரீகநாதன்)..= தாமரைச் செல்வன்

பத்மகுமார்......................................= தாமரைவாணன்

பத்மசுந்தரி.....................................= தாமரைச் செல்வி

பத்மா (பதுமநாயகி)...................= தாமரை

முண்டக்கண்ணி (முண்டகக்கண்ணி)..= மலர்விழி

வனஜா..............................................= தாமரை

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்

(vedarethinm70@gmail.com)

ஆட்சியர்

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 28]

{11-04-2022}

-------------------------------------------------------------------------------------


நளினா (தாமரை)

சனி, 9 ஏப்ரல், 2022

பெயர் விளக்கம் (07) கிரிராஜ் - பெயரின் பொருள் என்ன ?

கிரிராஜ்உங்கள் நண்பரா ?    இந்தப் பெயரின் பொருள் அவருக்குத் தெரியுமா ?


கிரி என்றால் மலை என்று பொருள். ராஜ் என்பது அரசன் என்பதைக் குறிக்கும். கிரிராஜ் என்றால் மலையரசன் - அதாவது சிலம்பரசன் என்று பொருள். சிலம்பு = மலை !

 

தமிழில் அரசன் என்று நாம் சொல்வதை வடமொழியில் ராஜா என்று சொல்கிறார்கள். ராஜா என்பது, ராஜ், ராஜு என்று திரிபடையும். அரசன் என்ற சொல் சுருக்கமாக அரசு என்றும் வழங்கப்படுகிறது. அரசு அல்லது அரசன் என்ற சொல்லுக்கு மன்னன், வேந்தன், புரவலன், பெருமான், ஏந்தல், பொருநன், குரிசில், கொற்றவன், கோ, இறைவன், அண்ணல், தலைவன், காவலன், செம்மல் என்றெல்லாம் பொருள் உண்டு. இவை மட்டுமன்றி, பூபாலன், நரபதி, சக்கிரி, நிருபன், பார்த்திவன் ஆகிய சொற்களும் அரசனைக் குறிப்பவையே !


சமஸ்கிருதத்தில் உள்ள ராஜ் அல்லது ராஜு என்ற சொற்கள் தனித்து நின்றோ அல்லது வேறு சில சொற்களுடன் இணைந்தோ மாந்தர்களுக்கு விளிப்புப் பெயராகச் சூட்டப்படுகிறது. இவ்வாறு சூட்டப்பெற்று வழங்கிவரும் மாந்தப் பெயர்களையும், அவற்றுக்கு இணையான அல்லது பொருத்தமான தமிழ்ப் பெயர்களையும் காண்போமா !.


-----------------------------------------------------------------------------

 

அக்னிராஜு (அக்னி = தீ, அனல்)........= அனலரசு

அனுமந்தராஜ் (அனுமன்=கவி)............= கவியரசு

ஆனந்தராஜ் (ஆனந்தம்=மகிழ்ச்சி)..= மகிழரசு

இராமராஜ் (இராமம்=அழகு, எழில்)..= எழிலரசு.

இன்பராஜ் (இன்பம்=மகிழ்ச்சி)...........= மகிழரசு

எத்திராஜ் (எதி=துறவி).............................= துறவரசு

கமல்ராஜ் (கமலம்=தாமரை).................= மலர்மன்னன்

காமராஜ் (காமன்= (மன்மதன்)............= இன்பரசு.

கிரிராஜன் (கிரி = மலை, குன்று).........= குன்றக் குரிசில்

கிருஷ்ணராஜ் (கிருஷ்ணம்=கருப்பு)= மேகவண்ணன்.

குப்புராஜ்  (குப்பம் = சிற்றூர்)...............= சிற்றரசு

குமாரராஜா (குமாரன்= இளையோன்)= இளவரசு.

கோவிந்தராஜ்.................................= கோவேந்தன்

ஞானராஜ் (ஞானம்=அறிவு)................= அறிவரசு.

சிங்கராஜ் (சிங்கம் = அரிமா).............= அரியரசு.

சிவன்ராஜ் (சிவன் = இறைவன்)......= இறையரசு

சின்னராஜ் (சின்ன = சிறிய)..............= சிற்றரசு

சுந்தர்ராஜ் (சுந்தரம் = எழில்)..............= எழிலரசு

சூரியராஜ் ( சூரியன் = ஒளி)................= ஒளியரசு

செல்வராஜ்....................... =செல்வப் பெருந்தகை

சொர்ணராஜ்.....................................= பொன்னரசு

சௌந்தரராஜ் (சௌந்தரம்=அழகு).= அழகரசு.

தங்கராஜ் (தங்கம்=பொன்)...................= பொன்னரசு

தர்மராஜ் (தர்மம் = அறம்).......................= அறவரசு.

தனராஜ் (தனம்= செல்வம், பொன்)..= பொன்னரசு.

தியாகராஜன் (தியாகம்-ஈகம்)............= ஈகவரசு

திருப்பதிராஜு ......................... = திருமலை நம்பி.

தேவராஜ் (தேவர் = வானவர்).......= வானவரேந்தல்.

நடராஜன் (நடம்=நடனம்,கூத்து).= கூத்தரசன்

நம்பிராஜ் (நம்பி = இறைவன்).....= இறையரசு.

நாகராஜ் (நாகம்= அரவம்)..............= அரவரசு.

பட்சிராஜன் (பட்சி = புள்)................= புள்ளரசு

பர்வதராஜன் (பர்வதம்=மலை)...= மலையரசு

பவுன்ராஜ் (பவுன்=பொன்)............= பொன்னரசு

பால்ராஜ் (பால=இளமை)...............= இளங்கோ

பாக்கியராஜ் .......................= செல்வச் செம்மல்.

பாரதிராஜா (பாரதி=கலைவாணி).= கலையரசு

பிரகாஷ்ராஜ் (பிரகாசம் = ஒளி)........= கதிரவன்

பிருதுவிராஜ் (பிருதுவி=புவி).............= புவியரசு

புஷ்பராஜ் (புஷ்பம்=மலர்)...................= மலர்மன்னன்.

பெத்துராஜ் (பெத்த=பெரிய)..............= பேரரசு.

பொன்ராஜ் (பொன்=தங்கம்).............= பொன்னரசு

மகராஜன் (மகா=பெரிய).....................= பேரரசு

மாதவராஜ் (மாதவன்=திருமால்)....= திருமலைமன்னன்

முத்துராஜ் (முத்து = மணி)...................= முத்தரசன்

முருகராஜ் (முருகு = அழகு)..................= அழகரசு

மோகன்ராஜ் (கயற்கொடியோன்)...= கயலரசு

ராஜகோபால்.............................= கோகுலவாணன்

ராஜசிம்மன் (சிம்மம்=சிங்கம்)..= அரிமாவேந்தன்

ராஜமகேந்திரன் (இந்திரன்).........= வானவரேந்தல்

ராஜமார்த்தாண்டன் (.சூரியன்)..= செம்பரிதி

ராஜராஜன் (ராஜவுக்கு ராஜா)...= மன்னர் மன்னன்.

ராஜரெத்தினம் (ரெத்தினம்=மணி)...= மணியரசு

ராஜன் ( அரசன்).........................= கோவேந்தன்

ராஜு................................................=  வேந்தன், அரசு,

ராஜேந்திரன் (வானவர்கோன்)...= விண்ணரசு

ராஜ்...................................................=  அரசு

ரெங்கராஜ் (ரெங்கம்=அரங்கம்). = அரங்கண்ணல்.

லெட்சுமிராஜு ...........................= திருமகள் நம்பி

வனராஜன் (வனம் = கான்)....... = கானரசு

விஜயராஜ் (விஜயம்=வெற்றி).. = வெற்றிவேந்தன்

ஜெயராஜ் (ஜெயம்=வெற்றி)......= வெற்றி வேந்தன்

 

-------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு:2053,மீனம் (பங்குனி) 26]

{09-04-2022}

-----------------------------------------------------------------------------


கிரிராஜ்