மலைமகளுக்கு வழங்கப்பெறும் பல்வேறு பெயர்களுள் ஒன்றுதான் சாமுண்டி !
தமிழில் ”கள்” என்னும் வேர்ச் சொல் கருமைப் பண்பை உணர்த்துவது. கள் - காள் - காளம் - காளி = கருப்பி. கருப்பு நிறமுடைய தெய்வம் காளி எனப்பட்டாள். தமிழகம் முழுவதும் வேந்தராலும் தொழப்பட்ட காளி, சிவன் தேவியாக்கப்பட்டாள். சிவனின் தேவியாகிய காளியும் சிவையும் (உமாதேவி) ஒன்றாதலால் காளியப்பன், பேய்ச்சியப்பன் முதலிய பெயர்கள் சிவனுக்குத் தோன்றின !
சிவனின் தேவியாகிய உமாதேவிக்கு பல பெயர்கள் வழங்கலாயிற்று. சூரி, மாலினி, சண்டிகை, தேவி, வீரி, மாதரி, கங்காளி, காளி, வேதாளி, மாதங்கி, பைரவி, சிவை, சாமுண்டி, ஆரணி, வல்லணங்கு, ஐயை, யாமளை, முக்கண்ணி, மதுபதி, ஆளியூர்தி, மாயை, யோகினி, பார்வதி, அம்பிகை, சாம்பவி, கௌரி, பவானி, விமலை எனப் பல பெயர்களால் உமாதேவி அழைக்கப் பெற்றாள். இவற்றின் அடிப்படையில் உருவான பெயர்களையும் அவற்றுக்கு நிகரான அல்லது பொருத்தமான தமிழ்ப் பெயர்களையும் பார்ப்போமா !
-------------------------------------------------------------------------------------
அபிராமி...........................= மலைமகள்
அம்பிகா...........................= உமையாள்
இமயவல்லி......................= பனிப்பாவை
இராஜேஸ்வரி...................= மலைமடந்தை
ஈஸ்வரி..............................= மலையரசி
கங்காளி............................= சிவமங்கை
காளி..................................= முகிலரசி
காளியம்மா......................= உமையம்மை
காளீஸ்வரி........................= முகிலரசி
கௌரி...............................= மலைமடந்தை
சங்கரி.................................= உமை
சாமுண்டி...........................= கயிலையரசி
பரமேஸ்வரி.......................= பெருந்தேவி
பராசக்தி.............................= ஆற்றலரசி
பவானி................................= அறச்செல்வி
பார்வதி...............................= மலைமகள்
பிரஹதாம்பாள்.................= கோப்பெருந்தேவி
பிரஹதீஸ்வரி...................= கோப்பெருந்தேவி
பைரவி................................= சிலம்பரசி
மகேஸ்வரி.........................= பெருந்தேவி
மாதங்கி.............................= சிலம்புச்செல்வி
மாதரி..................................= சிவநங்கை
மாலினி..............................= மலைமகள்
யாமளை (சியாமளா)......= பசும்பாவை
விமலா................................= தூயமணி
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 14]
{28-05-2022}
-------------------------------------------------------------------------------------
![]() |
சாமுண்டி |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக