பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 27 ஜூலை, 2022

இணைப்பெயர் (43) “ஆ - ஔ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

“ஆ - ஔ” எழுத்தில் தொடங்கும் பெயர்கள் ]

வழக்கத்தில் உள்ள மக்கட் பெயர்களும் 

அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப்

பெயர்களும்.

-------------------------------------------------------------------------------


ஆகாஷ்...(ஆகாயம்=வானம்)...= வானவரம்பன்

ஆஞ்சநேயன்..................................= கவியரசு

ஆதவன்.............................................= கதிரவன்

ஆதிசேஷன் (சேஷன்=பாம்பு)...= அரவரசு

ஆதித்தன்...........................................= பகலவன்

ஆதிமூலம் (முதற்காரணம்)......= இறையன்பு

ஆராதனா (வழிபடுதல்)...............= புகழரசி

ஆரோக்யசாமி.................................= நலநம்பி

ஆர்த்தி (விருப்பம்)..........................= விழைமலர்

ஆர்யா (அறிவாளி).........................= அறிவுடைநம்பி

ஆவரணமூர்த்தி(அழிப்பவன்)...= இறைமதி

ஆவுடையப்பன். (சிவன்).............= கோவேந்தன்

ஆனந்தநடராசன்............................= கூத்தரசன்

ஆனந்தபாஷ்யம் (இன்பக்கண்ணீர்) = இன்பவிழி

ஆனந்தம்............................................= பேரின்பம்

ஆனந்தன்..........................................= மகிழ்நன்

ஆனந்தி..............................................= மகிழ்மதி

ஆஷா (ஆஷா=ஆசை).................= அன்பரசி

இந்திரன்............................................= வானரசு

இந்திரா...............................................= விண்ணரசி

இந்து (நிலா).....................................= வெண்மதி

இந்துமதி............................................= நிறைமதி

இமயவல்லி......................................= மலைமகள்

இரணியன் (இரணியம்= பொன்)= பொற்செல்வன்

இரணியன்........................................= பொன்னழகு

இரத்தினசாமி..................................= மணியரசன்

இரத்தினம்........................................= ஒளிமணி

இரத்தினராஜ்...................................= மணியரசு

இரவி....................................................= கதிரவன்

இரவிக்குமார்...................................= பரிதிச்செல்வன்

இரவிச்சந்திரன்...............................= கதிர்நிலவன்

இராசேந்திரன்.................................= மன்னர்மன்னன்

இராமகிருட்டிணன்........................= எழில்மாலன்

இராமசாமி........................................= எழிலரசு

இராமசுந்தரம் (சுந்தரம்=அழகன்).......= பேரெழிலன்

இராமசேஷன் (சேஷன்=அடிமை)..........= எழிலடியார்

இராமச்சந்திரன்..............................= எழில்நிலவன்

இராமதாஸ்........................................= எழிலடியார்

இராமமூர்த்தி....................................= எழில்வேந்தன்.

இராமராஜ்...........................................= எழிலரசு

இராமலிங்கம்....................................= அழகியநம்பி

இராமன்......(இராமம்=எழில்..).....= எழிலன்

இராஜராஜன்......................................= மன்னர்மன்னன்

ஈசன்.......................................................= ஏந்தல்

ஈஸ்வரன்..............................................= இறைவன்

ஈஸ்வரன்...............................................= குரிசில்

ஈஸ்வரி...................................................= விண்ணரசி

ஈஸ்வரி...................................................= இறைவி

உதயகுமார்..........................................= இளையநம்பி

உதயபாஸ்கர்......................................= இளங்கதிர்

உதயன்...................................................= இளம்பரிதி

உத்தமன் (சிறந்தவன்)....................= சீராளன்

உத்திராபதி (உத்தரம்=வடக்கு)....= வடலரசு

உமாதேவி..............................................= உமையம்மை

உமாமஹேஸ்வரன்...........................= அம்மையப்பன்

உருக்குமணி.........................................= பொன்மணி

உருத்திரன் (சிவன்)............................= செங்கண்ணன்

உஷா(உஷத்=காலை,)......................= வைகறைச்செல்வி

எல்லப்பன்..............................................= கதிரவன்

எல்லம்பாள் (ஏலம்பாள்)...................= செங்கதிர்ச்செல்வி

ஏகநாதன்.................................................= தனியரசு

ஏகராஜ்......................................................= தனியரசு

ஏகாம்பரன்..............................................= பனிமலையரசு

ஏகாம்பரன்...............................................= சிவன்

ஏலம்பாள் (எல்லம்பாள்)....................= சுடர்மகள்

ஐராவதம்..................................................= தேவயானை

ஐஸ்வர்யா................................................= செல்வி


--------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]

{27-07-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக