[ “அ” எழுத்தில் தொடங்கும் பெயர்கள் ]
வழக்கத்தில் உள்ள மக்கட் பெயர்களும்
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப்
பெயர்களும்.
---------------------------------------------------------------------------------
அகிலா (உலகம்)......................................= பூம்பாவை
அகிலாண்டம் (பேருலகம்)...................= பூமகள்
அகிலாண்டேஸ்வரி.................................= நிலமகள்
அகோரம் (அழகில்லாதவன்)...............= எழிலரசு
அக்கம்மாதேவி (அக்கம்=கண்)...........= கண்ணம்மை
அக்னிராஜ் (அக்னி= அனல்).................= அனலரசு
அக்னிஹோத்ரி ........................................= வேள்வியரசு
அங்காளம்மாள் ....(காளம் = கருப்பு) = முகிலரசி
அங்குசபாணி (பிள்ளையார்)................= வேழமுகன்
அசுரகுரு..(வெள்ளைச்சாமி)..................= வெண்முனி
அசுவத்தாமன்...(அசுவம் = குதிரை)..= பரிமேலழகன்
அசுவினி (அசுவம்=குதிரை)..................= பரிமேலழகி
அசோகன் (அசோகம்=சோகமின்மை)= மகிழரசு
அச்சுதன்.........................................................= கண்ணன்
அஞ்சலி (மரியாதைக்குரியவள்).........= பண்பழகி
அஞ்சனா (அஞ்சனம்=கறுப்பு)...............= முகிலரசி
அட்சயன்...(கேடிலி)...................................= இன்பன்
அட்சயா (அழிவிலாள்)............................= இறைவி
அதிபன்...(தலைவன்)................................= அரசு
அதிரூபசௌந்தரி......................................= எழிலரசி
அநிருத்தன் (அடங்காதவன்)................= பேரரசு
அபரஞ்சி (பொன்).......................................= பொற்செல்வி
அபிநயா (குறிப்புக் காட்டல்)...............= கூத்தரசி
அபிராமி....(அழகி) (மலைமகள்).........= மலைமகள்
அபிஷேக் (அபிஷேகம்).........................= புனலரசு
அபூர்வா. (அபூர்வம்=அருமை).............= அருங்கோதை
அப்பு (நீர்........................................................= புனல்நாடன்
அப்புசாமி (நீர்க்கடவுள்)..........................=
பொன்னித்துறைவன்
அமரன் (விண்ணவர்)..............................= தேவன்
அமராவதி....................................................= வான்மதி
அமலன் (தூயவன்)..................................= தூயமணி
அமலா..........................................................= தூயமலர்
அமிர்தம்.....................................................= அமுதன் /
அமுதா
அமிர்தவல்லி (இனியவள்)................= இன்மொழி
அம்சவல்லி (அம்சம்= அன்னம்)....= அன்னக்கொடி
அம்பா..........................................................= அம்மை
அம்பிகாபதி..............................................= சிவன்
அம்பிகை...................................................= அன்னை /
அம்மை
அம்புஜம்....................................................=. தாமரை
அயக்ரீவன் ( திருமால்).....................= மணிவண்ணன்
அய்ஸ்வர்யா............................................= செல்வி
அரங்கநாதன்............................................= அரங்கநம்பி
அரவிந்தன் (நான்முகன்)....................= தாமரைச்செல்வன்
அரவிந்தாக்ஷன்.....................................=
தாமரைக்கண்ணன்
அரி...............................................................= மாலன்
அரிகிருஷ்ணன்......................................=
முகில்வண்ணன்
அரிஹரபுத்திரன்................................= அய்யனார்
அரிஹரன்.................................................= மாலரன்
அருட்ஜோதி.............................................= அருளொளி
அருணகிரி...(அருணன்=சூரியன்).......= சுடர்மலை
அருணன்....................................................=
செஞ்கதிர்
அருணாசலம்..........................................= சுடர்மலை
அருணாசலம்..........................................= பரிதிமலை
அருந்ததி.....................................................=
விண்மணி
அர்ச்சனா (வழிபடல்)........................= வணங்கழகி
அர்ச்சுனன் (பொன்னன்)...............= பொற்செல்வன்
அர்ச்சுனன்.................................................= வில்லாளன்
அர்த்தநாரி.................................................= மாதொருபாகன்
அர்த்தநாரீஸ்வரன்..............................= அம்மையப்பன்
அவந்திகா (கிளி)...................................= பைங்கிளி
அவிநாசி (அழிவிலான்)...................= இறைவன்
அற்புதம்.........................................................=
புதுமைப்பித்தன்
அனந்தசயனன்(திருமால்).............= மணிவண்ணன்
அனந்தன் (முடிவிலான்)...................= இறைவன்
அனிதா....................................................... ..= அனிச்சம்
அனிருத் (அடங்காதவன்)................= மாமல்லன்
அனு (பொறாமையின்மை)............= நற்குணம்
அனுசூயா (பொறாமையில்லாதவள்)…= சீர்மதி
அனுமந்தன்.................................................= வானரசு
அனுஷா (பின்னவள்)...........................= இளங்கிளி
அன்னபூரணி (அன்னம்=சோறு..= ஆர்கையழகி
அஸ்வினி (அஸ்வம்=குதிரை).......= பரிமேலழகி
அஸ்வின் (தேவ மருத்துவன்).......= பரிமேலழகன்
--------------------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]
{27-07-2022}
--------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக