[ “ச - சௌ” எழுத்தில் தொடங்கும் பெயர்கள் ]
வழக்கத்தில் உள்ள மக்கட் பெயர்களும்
அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப்
பெயர்களும்.
--------------------------------------------------------------------------------
சகஸ்ரநாமம் (1000 பெயர்கள்)........= மாயவன்
சகஸ்ரநாமம் = பேராளன் (கழ.தமி.அக)
சகாயம் (சகாயம்=நயம்)..................= நயனரசு
சக்கரதாரி. (சக்கரம் = ஆழி)............= ஆழிவேந்தன்
சக்கரபாணி. (சக்கரமேந்தி)............= ஆழியரசு
சக்கரவர்த்தி........................................= மன்னர்மன்னன்
சக்தி.......................................................=
ஆற்றலரசி
சங்கரநாராயணன்............................= சிவமாலன்
சங்கரன் (நன்மை செய்பவன்).......= சிவன்
சங்கரி...................................................=
சிலம்பரசி
சங்கீதா.................................................= இசையரசி
சசி (நிலவு)...........................................= நிலவரசி
சசிகலா................................................= இளம்பிறை
சசிதரன்................................................= பிறைசூடி
சசிபூஷன்.............................................= மதிசூடி
சச்சிதானந்தன்..................................= அறிவன்
சச்சிதானந்தன்..................................= மெய்யறிவின்பன்
சஞ்சய் (புரோகிதன்.).......................= திருமகன்
சஞ்சலா...............................................= திருமகள்
சடாட்சரம் (ஆறெழுத்தன்).............= திருமுருகன்
சடையப்பன் (சிவன்)........................= அழல்வண்ணன்
சட்டநாதன் .........................................= ஆறுமுகன்
சண்முகசுந்தரம்................................= குறிஞ்சிவேந்தன்
சண்முகம்...........................................= ஆறுமுகன்
சண்முகன்..........................................= ஆறுமுகன்
சதாசிவம்............................................= அருளாளன்
சதாசிவன் (நல்லான்)......................= கோமகன்
சதானந்தன்........................................= பேரின்பன்
சதிஷ் (சதி=பார்வதி).......................= சிலம்புச் செல்வன்
சதிஷ்குமார்.......................................= திருமுருகன்
சத்தியவதி .........................................= வாய்மைப்பாவை
சத்தியவாணி....................................= நன்மொழி
சத்தியன்.............................................= மெய்யழகன்
சத்தியா...............................................= மெய்யழகி
சந்தானகிருஷ்ணன்........................= இளங்கண்ணன்
சந்தானம் (செல்வம்)......................= திருச்செல்வம்
சந்தியா (காலை,மாலை)..............= வைகறைச்செல்வி
சந்திரகாந்தா (காந்தி=ஒளி)..........= மதியொளி
36. சந்திரகுமார்.......................................= மதியிளவல்;
மதிமகன்
சந்திரசூடன்.......................................= பிறைசூடி
சந்திரசேகரன்...................................= பிறைமுடி
சந்திரமதி...........................................= வெண்மதி
சந்திரமௌலி...................................= பிறைமுடி
சந்திரன்..............................................= மதியரசு
சந்திரிகா...........................................= நிலாமகள்
சபாநாயகம்.....................................= அம்பலவாணன்
சபாபதி..............................................= மன்றவாணன்
சமரசம்..............................................= அமைதிவேந்தன்
சமுத்திரம்.........................................= கடலரசு
சம்பத்.................................................= செல்வம்
சம்பந்தம்..........................................= உறவண்ணல்
சம்பூர்ணம் (நிறைவு).....................= நிறைமதி
சம்மந்தன் (செல்வம்)....................= திருச்செல்வம்
சம்யுக்தா (சம்யுக்த=கூடல்).........= கூடலழகி
சரசு (பொய்கை).............................= பொய்கைச்செல்வி
சரசுவதி............................................= நாமகள்
சரண்யா (சரண்=புகலடைவு)......= புகலரசி
சரவணக்குமார்...............................= பொய்கைச்செல்வன்
சரவணபவன்...................................= குறிஞ்சிவேந்தன்
சரவணன்(சரவணம்=நாணல்).....= திருமுருகன்
சரளா (சரளம்= முறையாக)..........= திருமுறைச்செல்வி
சரஸ்வதி............................................= நாமகள்
சரிதா (சரிதம்=வரலாறு/காதை).= காதைச்செல்வி
சர்வேஸ்வரன்..................................= பெருந்தேவன்
சவிதா................................................= கதிரவன்
சவிதா................................................= பரிதிச்
செல்வி
சற்குணன் (நல்லியல்பினன்).......= நன்னம்பி
சாந்தன்.............................................= அமைதியரசு
சாந்தி (அமைதி).............................= அமைதியரசி
சாமி...................................................= ஆண்டவன்
சாம்பசிவன் (சாம்புவசிவன்)......= அம்மையப்பன்
சாம்பமூர்த்தி..................................= அம்மையப்பன்
சாரங்கபாணி(சாரங்கம்=வில்)..= வில்லாளன்
சாரங்கன்...(சாரங்கம்=.சங்கு)...= மணிவண்ணன்
சாரதா...............................................= கலைமகள்
சாரதா...............................................= நாவரசி
சாரதி (சாரதி=வாகன ஓட்டி).......= தேர்வேந்தன்
சாவித்திரி (சிவன்).........................= சுடர்மகள்
சிகாமணி (சிகை=முடி)................= மணிமுடி
சிங்காரம் (ஒப்பனை)....................= எழிலரசன்
சிங்காரவேலன்...............................= எழிலன்
சிங்காரி.............................................= எழிலரசி
சிதம்பரம்..........................................= சிற்றம்பலம்
சித்திரபானு......................................= கதிரவன்
சித்ரா.................................................= ஓவியா
சிநேகா..............................................= நட்பரசி
சிநேகிதா..........................................= தோழமைச்செல்வி
சிந்தாமணி .....................................= அருள்மணி
சியாமளா (பச்சை மேனி)............= பசும்பாவை /பைம்பாவை
சிரஞ்சீவி (நீடு வாழ்வோன்).........= நீள்வாணன்
சிரோன்மணி (சிரம் + மணி).......= மணிமுடி
சிலம்பன் (சிலம்பு = மலை)..........= குறிஞ்சிவேந்தன்
சிவகடாட்சம்...................................= சிவனருள்
சிவசங்கரன் (சிவன்).....................= சுடர்வண்ணன்
சிவசைலம்.(சைலம் = மலை)......= சிவமலை
சிவதாணு.(தாணு=மலை)... .........= செங்குன்றன்
சிவந்தியப்பன் (சிவன்).................= அழல்வண்ணன்
சின்மயி (சின்மயம்=அறிவு).........= அறிவழகி
சின்னராசு.........................................= இளங்கோ
சின்னராஜு .....................................= இளவரசு
சீதளாதேவி (சீதளம்=குளிர்ச்சி)..= குளிர்விழிக்கோதை
சீதாபதி...(இராமன)........................= எழிலரசு
சீமா (பெண்மகள்)...........................= பாவை
சீமான்.................................................= செல்வம்
சீனிவாசன் (சீ = திருமகள்)...........= தாமரைவாணன்
சுகந்தன். (சுகந்தம்=நறுமணம்). = மணவழகன்
சுகந்தி................................................= மணவழகி
சுகுணா.............................................= பண்பழகி
சுசீந்திரன் (சுசி = சூரியன்)...........= கதிரவன்
சுதந்திரம்..........................................= விடுதலை
சுதர்சனம். (சக்கரம்)......................= ஆழிவேந்தன்
சுந்தரமூர்த்தி....................................= அழகண்ணல்
சுந்தரம்..............................................= எழிலன்
சுந்தரராஜன்.....................................= அழகரசன்
சுந்தரவல்லி......................................= எழிற்கொடி
சுந்தரன்.............................................= எழிலன்
சுந்தராம்பாள்..................................= அழகம்மை
சுந்தரி.................................................= அழகரசி
சுபா.....................................................= நற்பாவை
சுப்பிரமணியன் .............................= அடியார்க்கு நல்லான்
சுப்பிரமணியன்(சுப்ரம்=தூய).....= தூயமணி
சுப்புராஜ்............................................= தூயவன்
சுமதி...................................................=
அறிவுக்கரசி
சுயம்பிரகாசம்.................................= பேரொளி
சுயம்பு (தான் தோன்றி).................= முகிழன்
சுயம்பு................................................= முளையரசு
சுருதி..................................................= இசையரசி
சுரேஷ் (சுரர்களின் ஈஸ்வரன்).....= தேவேந்தன்
சுலோச்சனா (சுலோச்சனம்=மான்).= மான்விழி
சுவாமி...............................................= அடிகள்
சுவாமிநாதன்..................................= அழல் வண்ணன்
சுவேதா.............................................= மல்லிகை
சூரியநாராயணன்.........................= பரிதிமாலன்
சூரியமூர்த்தி (பரிதி உரு).............= கதிரவன்
சேது (சேது=சிவப்பு, கரை)..........= செங்கரை
சேதுராமன்.....................................= செங்குரிசில்
சேனாபதி.........................................= தளபதி
சேஷசாயி.(சேஷன்=பாம்பு).......= அரவணையன்
சேஷன் (அடிமை)..........................= அடியார்
சேஷன் (இளையவன்)..................= இளவல்
சேஷாசலம்.....................................= திருமலை
சொர்ணம்........................................= பொன்மணி
சோணாசலம்.(சோணிதம் = சிவப்பு).= செங்குன்றன்
சோதி................................................= ஒளிமதி
சோபனா (சோபனம்=அழகு)......= எழிலரசி
சோமசுந்தரம்.................................= மதியழகன்
சோமநாதன்...................................= மதியரசு
சோமராஜ்.......................................= மதியரசு
சோமன்...........................................= மதிவாணன்
சோமாஸ்கந்தன்...........................= மதிவேலன்
சோமு...............................................= மதியரசு
சௌந்தரம்.....................................= அழகரசி
சௌந்தரராஜன்............................= எழிலரசு
சௌந்தரவல்லி.............................= எழிற்கொடி
சௌந்தரி........................................= எழிலரசி
சௌந்தர்யா...................................= அழகரசி
சௌந்தர்யா...................................= எழிலரசி
சௌபாக்யம்..................................= செல்வி
சௌரிராஜன்.................................= முடியரசன்
--------------------------------------------------------------------------------
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 11]
{27-07-2022}
--------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக