பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

இணைப்பெயர் (50) “ம - மௌ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

முதல் மௌவரையிலான வடமொழிப் பெயர்கள் !

வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் 

அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !

----------------------------------------------------------------------------------

மகராஜன்.............................= மன்னர்மன்னன்

மகரிஷி.................................= மாமுனிவன்

மகாதேவன்.........................= பெருந்தேவன்

மகாதேவி.............................= பெருந்தேவி

மகாத்மா..............................= பெருந்தகை

மகாலட்சுமி..........................= மலர்ச்செல்வி

மகாவிஷ்ணு........................= வானவரம்பன்

மணிவாசகம்.......................= மணிமொழி

மது (மது = தேன்)................................= தேன்மொழி

மதுசூதனன்..........................= மாலன்

மதுபாலா.............................= இளவேனில்

மதுரபாஷானி......................= இன்மொழி

மதுரம் (மதுரம்=இனிப்பு)...= இன்மொழி

மந்திரா (மந்திரம்)................= மறைமொழி

மரகதம் (பச்சைநிறம்)..........= பைம்பாவை

மரகதவல்லி...........................= பைங்கொடி

மனோகரன் (உள்ளம் கவர்பவன்)..................= இனியவன்

மனோரஞ்சிதம்.....................= நறுமலர் மங்கை

மனோரமா(இமயத்தின் மனைவி..)..............= பனிப் பாவை

மஹேந்திரன்..........................= வானரசு

மஹேஸ்வரன்........................= பேரரசு

மஹேஸ்வரன்........................= பெருந்தேவன்

மஹேஸ்வரி...........................= பேரரசி

மாதுரி (மாதுரி=இனியவள்)..................= கனிமொழி

மாதுரிதேவி..........................= கனிமொழி

மாத்ருபூதம்.........................= தாயுமானவன்

மாயவன் (திருமால்)......................= மணிவண்ணன்

மாயன்..................................= திருமால்

மாயி (திருமால்).............................= கடல்வாணன்

மாருதி...................................= கானேந்தல்

மார்க்கண்டன். (ஊ+நசையன்=).......=ஊனசையன்

மார்கசகாயம்.......................= நட்பரசு

மாலதி ...................................= மல்லிகை

மாலா.....................................= கோதை

மாலி......................................= கதிரவன்

மாலினி.................................= சிலம்பரசி,கொற்றவை

மீனலோசனி (லோசனம்=கண்).............= கயல்விழி

மீனாட்சி...............................= அங்கயற்கண்ணி

மீனாட்சி...............................= கயற்கண்ணி

முரளி (புல்லாங்குழல்)........................= குழல்மாலன்

முருகன்......................................= குழகன் (இளைஞன்)

மூர்த்தி (வடிவம்)............................= மெய்யழகன்

மேகநாதன்............................= முகிலன்

மைத்திரேயன்......................= நட்பழகன்

மைத்திரை (நட்பு).........................= நட்பழகி

மோகனா (மோகனம்=வேட்பு)..............= வேண்மா

மோகினி...................................= வேண்மா / அழகி

மௌலி (முடி)......................= முடியரசன்

----------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக