பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

இணைப்பெயர் (49) “ப - பௌ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

முதல் பௌவரையிலான வடமொழிப் பெயர்கள்

வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும் அவற்றுக்குப் 

பொருத்தமான  தமிழ்ப் பெயர்களும் !


----------------------------------------------------------------------------------

பகவத்........................................= இறையண்ணல்

பக்தவத்சலன்..........................= அடியார்க்கு நல்லார்

பங்கஜம்.......................................= தாமரை

பசுபதி.(பசு= கோ)..........................= கோவேந்தன்

பச்சியம்மாள் (உமா) ...............= மலையரசி

பச்சையப்பன் (திருமால்).........= மாயவன்

பஞ்சநதம்...................................= ஐயாறப்பன்

பஞ்சலிங்கம்..............................= ஐயிலங்கன்.

பஞ்சாட்சரம்..............................= ஐந்தெழுத்தன்

பட்சிராஜன்...............................= புள்ளரசு

பண்டரிநாதன்.........................= தாமரைச் செல்வன்

பதி (தலைவன், கணவன்)................= அரசு,

பத்மநாபன் ...............................= திருவரங்கன்

பத்மபூஷன்................................= தாமரை சூடி

பத்மாசனி...................................= திருமகள்

பத்மாவதி....................................= தாமரைச்செல்வி

பரஞ்சோதி..................................= பரஞ்சுடர்

பரமசிவன்...................................= உமா மணாளன்

பரமன் (சிவன்)...............................= கயிலைவாணன்

பரிமளம் (நறுமணம்)....................= மணமல்லி

பர்வதபுத்திரி (மலை).................= குன்றச்செல்வி

பர்வதம் (மலை)..............................= சிலம்புச் செல்வி

பர்வதராஜபுத்திரி....................= மலைமங்கை

பர்வதராஜன்..............................= பூங்குன்றன்

பவானி.........................................= பனிப்பாவை

பவித்திரா....................................= தூயமலர்

பவித்திரா....................................= தூய மணி

பவுன்ராசு....................................= பொன்னரசு

பற்குணன் (அர்ச்சுனன்.)..............= பொன்னரசு

பாக்கியம்....................................= செல்வி

பாக்கியவதி................................= நலச்செல்வி

பாரதி............................................= நாவுக்கரசி

பார்த்தசாரதி.............................= மணிவண்ணன்

பார்த்திபன் (அர்ச்சுனன்)...........= பொற்செல்வன்

பார்த்திபன் ................................= அரசு / மன்னன்

பார்வதி.........................................= மலைமகள்

பாலகிருஷ்ணன்......................= இளவழகன்

பாலகோபால்............................= இளங்கண்ணன்

பாலசுந்தரம்..............................= இளவழகன்

பாலச்சந்திரன்.........................= இளம்பிறை; இளமதி

பாலமுரளி.................................= இளையநம்பி

பாலாஜி......................................= மணிவண்ணன்

பால்ராஜ்....................................= இளவரசு

பாவாயி......................................= பாவரசி

பானு (சூரியன்).............................= சுடரொளி

பாஸ்கரன்..................................= பரிதி

பாஷ்யம் (உரை)..........................= நன்மொழி

பிச்சமூர்த்தி (சிவன்).................= பிறைசூடி

பிச்சாடனன்.(இரவலன்)............= சிவன்

பிச்சை..........................................= ஈசன்

பிரகாசம்....................................= பேரொளி

பிரகாஷ்......................................= பேரொளி

பிரபஞ்சன்.................................= பூவேந்தன்

பிரபா (ஒளி)..................................= ஒளிமதி

பிரபு (பெருந்தகை)........................= பேரண்ணல்

பிரமநாயகம்.............................= இறையண்ணல்

பிரமானந்தன்...........................= பேரின்பன்

பிரஜாபதி...................................= அரசு

பிரஹதீஸ்வரன்......................= பேரரசு

பிரியா (பெண், காதலி).................= அன்பழகி

பிருதிவிராஜ்..............................= பூவேந்தன்

பிரேமா.........................................= அன்புச்செல்வி

பினாகபாணி (பினாகம்=வில்..)= வில்லாளன்

பீதாம்பரம் (பீதம்=பொன்)..........= பொன்மேனி

புண்டரீகம் (பண்டரி)..................= தாமரை

புண்ணியமூர்த்தி...................= அறவாணன்

புருஷோத்தமன்.......................= ஆண்டகை

புவனா...........................................= பூமகள்

புவனேஸ்வரி.............................= பூவரசி

புஜங்கன் (பாம்பு) ........................= அரவண்ணல்

புஷ்பமாலா................................= பூங்கோதை

புஷ்பவல்லி................................= பூங்கொடி

புஷ்பவனம்................................= பூஞ்சோலை

புஷ்பா / புஷ்பம்........................= பூம்பாவை / மலர்

புஷ்பாசலம்................................= பூங்குன்றன்

பூதலிங்கம் (நிலம்,நீர்,தீ,வளி,வெளி).= ஐயிலங்கம்

பூரணச்சந்திரன்.........................= நிறைமதி

பூரணி..............................................= நிறைமதி

பூர்ணலிங்கம்..............................= திருவிலங்கன்

பூஜா (புகழ்ந்து வழிபடல்)..................= புகழரசி

பூஷன் (சூடியவன்)............................= ஏந்தல்

பெத்தபெருமாள்........................= மாதவன்

பேய்ச்சியப்பன் (சிவன்).............= சுடர்வேந்தன்

பைரவன் (அச்சம்தரு உருவன்).......= பேமுருவன் (பேம்=அச்சம்)

--------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக