பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

இணைப்பெயர் (52) “ர - ரௌ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

 

முதல் ரௌவரையிலான வடமொழிப் பெயர்கள் !

வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும்

அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும் !

-------------------------------------------------------------------------------------


ரகு (சூரியன்).............................= பகலவன்

ரங்கசாமி....................................= அரங்கண்ணல்

ரங்கநாதன்.................................= அரங்கநம்பி

ரங்கராஜன்.................................= அரங்கவேந்தன்

ரங்கன்..........................................= அரங்கன்

ரஞ்சிதம் (இனிமை)......................= இன்மொழி

ரஞ்சிதா........................................=இனியா

ரஞ்சனி.........................................= நீலா

ரதி (காமன் மனைவி)................= வில்லவன் கோதை

ரத்தினசபாபதி...........................= கூத்தரசன்

ரத்தினசபை ...............................= மணியரசு

ரத்தினம்.....................................= செம்மணி

ரத்தினம்......................................= ஒளிமணி

ரத்தினவேல்................................= மணிவேலன்

ரமணன் (கணவன்)..................= மணவாளன்

ரமணி (இன்பம் தருபவன்)......= இனியவன்

ரமா............................................= தாமரைச்செல்வி

ரமா.............................................= திருமகள்

ரமாகாந்தன்...............................= தாமரைச்செல்வன்

ரமாபதி........................................= மாலன்

ரம்பை (தேவமகள்)....................= தேவமங்கை

ரவி (சூரியன்)...............................= பரிதி

ரவி.................................................= கதிரவன்

ரவிசங்கர்.....................................= செங்கதிர்

ரவிச்சந்திரன்................................= கதிர்நிலவன்

ரவிச்சந்திரன்................................= கதிர்மதி

ரவிபாஸ்கர்...................................= இளம்பரிதி

ரவிராஜ்............................................= கதிர்மன்னன்

ரஜினி (இரவு).............,..................= கார்வண்ணன்

ரஜினிகாந்த்...................................= மதியொளி

ராகவன்..........................................= எழிலன்

ராணி...............................................= அரசி

ராமசேது........................................= எழிலணை

ராமசேஷன் (சேஷன்=இளையவன்)............= இளையநம்பி

ராமநாதன்....................................= எழிலரசு

ராஜகுமாரி....................................= இளவரசி

ராஜசுலோசனா............................= மான்விழி

ராஜபுத்திரன்................................= இளவரசு

ராஜராஜன்.....................................= மன்னர் மன்னன்

ராஜராஜேஸ்வரி..........................= பேரரசி

ராஜலட்சுமி....................................= திருமகள்

ராஜஸ்ரீ............................................= அரசி

ராஜா...............................................= அரசு

ராஜாங்கம் (அரசாட்சி)................= அரசு

ராஜ்குமார்.....................................= கோமகன்

ருக்மணி........................................= பொன்மணி

ருத்ரன்............................................= அழல்வண்ணன்

ருத்ராபதி......................................= பரிதிவண்ணன்

ரூபசௌந்தரி...............................= பேரழகி

ரூபா...............................................= வடிவழகி

ரூபாவதி.......................................= பேரழகி

ரேகா (ஒளிக்கதிர்)......................= செங்கதிர்

ரேணுகா (ரேணு=எழில்).............= எழிலரசி

ரேணுகாம்பாள்............................= அழகம்மை


---------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக