சிவபெருமானுக்குப் பெயர்தான் ஸ்ரீகண்டன் !
--------------------------------------------------------------------------------------
சிவபெருமான் பல்வகைப்
புராணங்களாலும், இதிகாசங்களாலும் பல்வேறு பெயர்களால்
விளிக்கப்பட்டார். பெரும்பாலும் சமற்கிருதப் பெயர்களாகவே அவை அமைந்தன.
சிவபெருமானின் பெயர்களை ஆண் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழும் போக்கு மக்களிடையே
தோன்றின. பெயரின் பொருளை அறியாமலேயே குழந்தைகளுக்குப்
பெயர் சூட்டும்
நிகழ்வுகள் நடந்துவருகின்றன !
ஸ்ரீகண்டன் என்றால் சிவன் என்று பொருள்.
ஸ்ரீ என்னும் சொல்லுக்கு திரு, திருமகள், அழகு, நீலம் என்றெல்லாம் பொருளுண்டு. ஸ்ரீ
= நீலம்; கண்டன் = கழுத்தையுடையவன்; அதாவது
நீலகண்டன் என்று பொருள் ; சிவன்
என்பதைக் குறிக்கும் பல்வேறு சமற்கிருதப் பெயர்களையும் அவற்றுக்கு இணையான தமிழ்ப்
பெயர்களையும் பார்ப்போமா !
-----------------------------------------------------------------------------------------------
- அம்பிகாபதி..............................= அழல்வண்ணன்
- அர்த்தநாரி.................................= மங்கைபங்கன்
- அர்த்தநாரீஸ்வரன்..............= மாதங்கன்
- அவிநாசி.............................../....= கயிலைவாணன்
- அவிநாசிலிங்கம்..................= சிவச்செல்வன்
- ஆலகண்டன்..........................= நஞ்சுண்டான்
- ஆனந்த நடராஜன்..............= இன்பக் கூத்தன்
- ஈஸ்வரன் (உடையான்).............= திருச்செல்வன்
- ஏகாம்பரம்...............................= ஆடல்வல்லான்
- கங்காதரன்.............................= கங்கைகொண்டான்
- கல்யாணசுந்தரன்...............= மணவழகன்
- குஞ்சிதபாதம்.........................= கூத்தரசன்
- சச்சிதானந்தன்......................= மெய்யறிவின்பன்
- சதாசிவன் (நல்லான்)...............= அருள்நம்பி
- சந்திரசூடன்............................= பிறைசூடி
- சந்திரசேகரன்.......................= மதிசூடி
- சந்திரமௌலி.......................= பிறைசூடி
- சபாநாயகம்............................= அம்பலவாணன்
- சபாநாதன்...............................= தில்லைவாணன்
- சபாபதி......................................= மன்றவாணன்
- சர்வேஸ்வரன்.......................= பெருந்தேவன்
- சாம்பசிவன்.............................= அம்மையப்பன்
- சாம்பமூர்த்தி...........................= அம்மையப்பன்
- சுந்தரன்......................................= மெய்யழகன்
- சுயம்புலிங்கம்........................= முகிழன்
- சோமநாதன்.............................= பிறைசூடி
- தட்சிணாமூர்த்தி....................= தென்முகநம்பி
- தட்சிணாமூர்த்தி....................= தென்னவன்
- நடராஜன்....................................= கூத்தபிரான்
- பக்தவத்சலம்...........................= அடியார்க்கு நல்லார்
- பசுபதி (பசு=உயிர், கோ).................= கோவேந்தன்
- பஞ்சநதன்..................................= ஐயாறண்ணல்
- பஞ்சாட்சரன் (ஐந்தெழுத்தன்).....= அம்பலக்கூத்தன்
- பரஞ்சோதி.................................= பேரொளி
- பரமசிவன்...................................= விண்ணரசு
- பரமன்............................................= தீவண்ணன்
- பரமேஸ்வரன்...........................= பெருந்தேவன்
- பிரஹதீஸ்வரன்........................= பெருவுடையார்
- பினாகபாணி...............................= வில்லாளன்
- மகாதேவன்..................................= பெருந்தேவன்
- மஹேஸ்வரன்...........................= கோப்பெருந்தேவன்
- மாத்ருபூதம்..................................= தாயுமானவன்
- மார்க்கசகாயம்...........................= நன்னெறிநம்பி
- வன்மீகநாதன்.............................= புற்றுறைநம்பி
- வில்வநாதன்................................= வில்வநேயன்
- விஸ்வநாதன்...............................= பெருந்தேவன்
- விஸ்வலிங்கம்............................= வானவரம்பன்
- ஜகதீசன்...........................................= உலகநம்பி
- ஜகதீஸ்வரன்.................................= பார்வேந்தன்
- ஸ்ரீகண்டன் ( சிவன் ).......................= அந்திவண்ணன்
- ஸ்ரீநாத்................................................= பிறைசூடி
---------------------------------------------------------------------------------------
(01)(அம்பிகை = கணவன்) (02)(அர்த்த = பாதி) (நாரி = மங்கை) (04) அவிநாசி = சிவன்; (06)(ஆலம் = நஞ்சு) (08)(ஈஸ்வரன் = உடையவன்) (09)(ஏகாம்பரன் = ஒற்றை உடை அணிந்தவன்) (10)(தரன் = அணிந்தவன்) (11)(கல்யாணம் = திருமணம்) (சுந்தரம் = அழகு) (12)(குஞ்சிதம் = தூக்கிய, வளைந்த) (17) மௌளி = முடி; (18)(சபா = அம்பலம்; (22)(சாம்பவி = அம்மை) (25)(சுயம்பு = தான்தோன்றி) (26) (சோமம் = நிலவு; (28)(தட்சிணம் = தெற்கு) .(29)(நடம் = கூத்து) (30.(பக்தர் = அடியார்) (39)(பினாகம் = வில்) (42)(மாத்ரு = தாய்) (43)(மார்க்கம்=வழி) (சகாயம் = உதவி) (44)(வன்மீகம் = புற்று) (46)(விஸ்வம் = பெரிய) (48)(ஜகம் = உலகம்) (51) (நாத்= நாதன் = தலைவன், சிவன்)
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
![]() |
ஸ்ரீநாத் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக