பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 8 மே, 2022

பெயர் விளக்கம் (15) கிருஷ்ணன் - பெயரின் பொருள் என்ன !

கண்ணன் கருப்பு நிறத்தவன் என்பதால் கிருஷ்ணன் ஆனான்!  

--------------------------------------------------------------------------------------        


சமற்கிருதத்தில் கிருஷ்ணம் என்றால் கருப்பு என்று பொருள். கிருஷ்ணம் என்ற சொல்லிலிருந்து  பிறந்தது தான் கிருஷ்ணன் என்ற பெயர். கிருஷ்ண பரமாத்மாவின் நிறம் கருப்புதானே !. மனிதர்களில் பலர் கருப்பு நிறம் அன்றோ ! கருப்பு என்றால் காக்கை போன்ற கருப்பு என்று பொருள் கொள்ளக் கூடாது !


கருப்பும் நீலமும் ஓரினத்தைச் சார்ந்தவை. சில நேரங்களில் நீலமும் கருப்பாகத் தோன்றும்; கருப்பும் நீலமாகத் தோன்றும். இதன் அடிப்படையில் தான் கிருஷ்ணனை நீல வண்ணக் கண்ணன் என்று இலக்கியங்கள் சொல்லும். கிருஷ்ணம் என்ற சொல்லிலிருந்து பிறந்த பெயர்களைக் காண்போமா !

 

--------------------------------------------------------------------------------------

 

இராதா கிருஷ்ணன் (இராதா=வல்லி).......= வல்லிக்கண்ணன்

இராமகிருஷ்ணன் (இராமம்=எழில்)...........=எழிற்கண்ணன்

கிருஷ்ணகாந்த் (காந்த்=ஒளி)............=கடல்வண்ணன்

கிருஷ்ணசாமி ( கருப்புசாமி)..............=மணிவண்ணன்

கிருஷ்ணமணி.............................=மணிமாலன்

கிருஷ்ணமூர்த்தி (கருப்பையன்)...........=முகில்வண்ணன்

கிருஷ்ணராஜு (ராஜு=வேந்தன்)).........=கார்வேந்தன்

கிருஷ்ணன் ( கருப்பு நிறத்தவன்).............=மாலன்

கோகுலகிருஷ்ணன் (கோகுலம் =ஆயர்).........=கோகுலவாணன்

கோபாலகிருஷ்ணன் (கோ=பசுக்குலம்)..........=ஆகுலவாணன்

சிவராமகிருஷ்ணன்(சிவ ராமம்=செந்திரு).......=செந்திருமாலன்

சென்னகிருஷ்ணன் (சென்ன = சிறிய)..............=இளங்கண்ணன்

தர்மகிருஷ்ணன் (தர்மம்=அறம்)....=அறவாழி

நவநீதகிருஷ்ணன்(நவநீதம்=வெண்ணெய்)...=வெண்ணகை வேந்தன்

பங்கஜகிருஷ்ணன் (பங்கஜம்=தாமரை).........=தாமரைவாணன்

பாலகிருஷ்ணன் (பால = இளமை)........=இளங்கண்ணன்

முத்துகிருஷ்ணன் (முத்து=மணி)........=மணிக்கண்ணன்

ஹரிகிருஷ்ணன் (ஹரி=சிங்கம்).........=அரிமாஅண்ணல்

அனந்தகிருஷ்ணன் (அனந்தம் = நெடுமை)......=நெடுமாலன்


--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு, 2053, மேழம் (சித்திரை) 25]

{08-05-2022}

-------------------------------------------------------------------------------------

கிருஷ்ணன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக