பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 ஜூன், 2022

பெயர் விளக்கம் (31) ராஜ் / ராஜு / ராஜன் - பெயரின் பொருள் என்ன ?

 

 பெயருடன் “ராஜ்” சேர்ப்பதில் அப்படியென்ன ஆர்வம் ?

-----------------------------------------------------------------------------------


தமிழகத்தில் மாந்தப் பெயர்களில் 90% அளவுக்கு வடமொழிப் பெயர்களாகவே அமைந்திருப்பது தமிழ்ர்களின் விழிப்புணர்வு இன்மையையே காட்டுகிறது. அஃதல்லாமல், பெயருடன்ராஜ்அல்லது ராஜுஅல்லதுராஜன்என்பதைச் சேர்த்துச் சூட்டிக் கொள்வதில் அவர்களுக்கு பெருமை வேறு !

 

ராஜ்என்னும் சொல்லுக்கு அரசன், தலைவன் என்றெல்லாம் பொருளுண்டு. “அரசன்என்னும் பொருள்படும்  “ராஜ்அல்லது ராஜுஅல்லதுராஜன்என்னும் பெயரைத் தனியாகவோ அல்லது பெயரின் பின்னொட்டாகவோ  சூட்டிக்கொண்டால், வாழ்வில் உயர்நிலையை அடையலாம் என்னும் நம்பிகை காரணமாகவோ என்னவோ  ராஜ்அல்லது ராஜுஅல்லதுராஜன்என்னும் பெயரில் முடியும் மாந்தப் பெயர்களை நாம் நிரம்பவே காணலாம் !

 

அத்தகைய வடமொழிப் பெயர்களையும், அப்பெயர்களுக்கேற்ற தூய தமிழ்ப் பெயர்களையும் பார்க்கலாம் !

 

-----------------------------------------------------------------------------------

  1. அக்னிராஜ் .............................= சுடர்வேந்தன்
  2. அப்புராஜ்...................................= புனலரசு
  3. அழகுராஜ்.................................= எழிலரசன்
  4. ஆனந்தராஜ்.............................= மகிழரசு
  5. இராமராஜ்................................= எழிலரசன்
  6. இன்பராஜ்.................................= மகிழரசு
  7. கருணைராஜ்...........................= அருளரசு
  8. காந்திராஜன்.............................= ஒளியரசு
  9. காமராஜ்......................................= இன்பரசு
  10. காளிராஜன்...............................= முகிலரசு
  11. கிரிராஜன்..................................= சிலம்பரசன்
  12. கிருஷ்ணராஜ்..........................= முகிலரசு
  13. குப்புராஜ்.....................................= சிற்றரசு
  14. குழந்தைராஜ்.............................= இளவரசு
  15. கோபால்ராஜு.........................= இளவரசு
  16. கோவிந்தராஜு.......................= கோவேந்தன்
  17. சகாயராஜ்.................................= அருளரசு
  18. சண்முகராஜன்.......................= அழகரசன்
  19. சிங்கராஜ்...................................= அரிமாவரசு
  20. சிவராஜன்.................................= இறையரசன்
  21. சிவன்ராஜு................................= இறையரசு
  22. சின்னராஜு...............................= சிற்றரசு
  23. சுந்தர்ராஜன்.............................= அழகரசன்
  24. சூர்யராஜ்....................................= பகலரசு
  25. செந்தில்ராஜ்.............................= செந்தில்வேந்தன்
  26. செல்வராஜ்...............................= திருச்செல்வம்
  27. சௌந்தர்ராஜன்......................= எழிலரசன்
  28. சௌரிராஜ்................................= முடியரசன்
  29. ஞானராஜ்...................................= அறிவரசு
  30. தங்கராஜ்....................................= பொன்னரசு
  31. தர்மராஜ்.....................................= அறவரசு
  32. தியாகராஜன்............................= ஈகவரசு
  33. திருப்பதிராஜு..........................= சிலம்பரசு
  34. திருமலைராஜன்....................= சிலம்பரசன்
  35. துரைராஜன்..............................= முடியரசு
  36. தேவராஜ்...................................= இறையரசன்
  37. நடராஜன்...................................= கூத்தரசன்
  38. நாகராஜன் ..............................= முகிலரசு
  39. பட்சிராஜன்...............................= புள்ளரசு
  40. பழனிராஜ்.................................= தென்னரசு
  41. பாக்கியராஜ்.............................= பேறரசு
  42. பிருதிவிராஜ்...........................= புவியரசன்
  43. பிரேம்ராஜ்................................= அன்பரசன்
  44. புஷ்பராஜ்..................................= மலர்மன்னன்
  45. பெத்துராஜ்................................= பேரரசு
  46. மகிமைராஜ்.............................= பேரரசு
  47. மாணிக்கராஜ்.........................= மணியரசு
  48. முருகராஜன்...........................= அழகரசன்
  49. முருகராஜ்................................= அழகரசன்
  50. மோகன்ராஜ்............................= அன்பரசன்
  51. யுவராஜ்.....................................= இளவரசு
  52. யோகராஜ்.................................= வளனரசு
  53. ராஜராஜன்................................= மன்னர்மன்னன்
  54. ராஜு............................................= அரசு
  55. ரெங்கராஜன்............................= அரங்கமன்னன்
  56. விமல்ராஜ்................................= வெண்மணிவேந்தன்
  57. வேல்ராஜ்.................................= வேலரசு
  58. ஜெயராஜ்..................................= வெற்றிவேந்தன்


----------------------------------------------------------------------------------

 [பெயரின் பொருள் விளக்கம்]

(01).அக்னி = சுடர்; (02).அப்பு = நீர் (புனல்) ; (04).ஆனந்தம் = மகிழ்ச்சி ; (05).இராமம் = எழில்; (08).காந்தி = ஒளி; (09).காமம் = இன்பம்; (10) காளி = முகில் (போலக் கறுப்பானவள்) ; (11).கிரி = மலை, சிலம்பு ; (12) கிருஷ்ணம் = முகில் போன்ற கறுப்பு ; (13) குப்பு = குப்பத்தின் தலைவன் = சிற்றரசு (15) கோபாலன் = மாடு மேய்க்கும் இளைஞன் ; (16).கோ = மேன்மை ; (17) சகாயம் = அருள் ; (18) சண்முகம் = முருகன் அல்லது அழகு


(19) சிங்கம் = அரிமா ; (21) சிவன் = இறைவன் ; (22) சின்ன = சிறிய ; (23) சுந்தர் = அழகு ; (24) சூரியன் = பகலவன் ; (27).சௌந்தரம் = அழகு ; (28) சௌரி = முடி ; (29) ஞானம் = அறிவு ; (31) தர்மம் = அறம் ; (32) தியாகம் = ஈகம்; (33).திருப்பதி = திருப்பதி என்னும் மலை (சிலம்பு = மலை) (34) திருமலை = மலையாகிய சிலம்பு ; (35) துரை = தலைவன்; தலைவன் அணியும் முடி (கிரீடம்) ; (36) தேவன் = இறைவன் ; (38) நாகம் = மேகம் எனப்படும் முகில் ; (40).பழனி = தென்மலை ;


(41) பாக்கியம் = (நற்)பேறு (42) பிருதிவி = புவி ; (43) பிரேமை = அன்பு ; (44).புஷ்பம் = மலர்; (45).பெத்து = பெரிய ; (46) மகிமை = பெருமை ; (47).மாணிக்கம் = ஒளி மணி ; (48) முருகன் = அழகன் ; (50) மோகம் = பேரவா; பேரன்பு ; (51) யுவன் = இளைஞன் ; (52) யோகம் = வளம் (வளன்) ; (55) ரெங்கம் = அரங்கம் ; (56) விமல் = தூய்மை, வெண்மை; (58) ஜெயம் = வெற்றி.


-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 18]

{01-06-2022}

-----------------------------------------------------------------------------------

இராஜன்

 


 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக