பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 2 மே, 2022

பெயர் விளக்கம் (13) சொர்ணம் - பெயரின் பொருள் என்ன ?

ஏழை வீட்டுப்  பெண்ணுக்குப் பெயர் சொர்ணம் !

 -------------------------------------------------------------------------------------

தமிழில் பொன் எனப்படும் தங்கத்தைக் குறிக்க பல சொற்கள் வழக்கத்தில் உள்ளன. அவற்றுள் சில தமிழ்ச்சொல்லாகவும் பல சமஸ்கிருதச் சொல்லாகவும் உள்ளன. அவை வருமாறு :- மாசை, மாசி, பீதகம், பீதம், மாடை, மாடு, வேங்கை, ஆசை, சுவணம், சுவர்ணம்காரம், அருத்தம், காஞ்சனம், காணம், தேசிகம், கனகம், கைத்து, செந்தாது, பொலம், அத்தம், சாமி, வித்தம், தனம், உடல், பண்டம், இரணியம், நிதி, வெறுக்கை, ஈகை, கல்யாணம், ஏமம், பொருள், உரை, சந்திரம், சாம்பூதனம், பூரி, ஈழம், திரவியம், சாதரூபம், செங்கொல், நிதானம், மாழை, அரி, தபனியம், பணியம், ஆடகம் ஆகியவை. சமஸ்கிருதச் சொல்லின் அடிப்படையில் பல பெயர்கள் மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றைப் பார்ப்போமா !

 

-------------------------------------------------------------------------------------

 

          ·         மாசி..................................= தங்கம்

          ·         பீதாம்பரம்......................= பொன்னிழை

          ·         மாடையன்....................= தங்க மணி

          ·         வேங்கையன்...............= தங்கசாமி

          ·         சுவர்ணம்.......................= பொற்செல்வி

          ·         சுவர்ணலதா.................= பொற்கொடி

          ·         சொர்ணவல்லி............= பொற்கொடி

          ·         சொர்ணம்......................= தங்கம்

          ·         காஞ்சனா......................= பொன்மகள்

          ·         காஞ்சனமாலா............= பொன்மாலை

          ·         தேசிகன்.........................= பொற்செல்வன்

          ·         கனகம் (பொன்)..........= பொன்னி

          ·         கனகதாரா......................= பொன்மாரி

          ·         கனகாம்புஜம்................= பொற்றாமரை

          ·         கனகராஜன்....................= பொன்னரசு

          ·         கனகசபை......................= பொன்னம்பலம்

          ·         கனகசுந்தரம்.................= பொன்னழகு

          ·         கனகவேல்.....................= தங்கவேல்

          ·         கனகமணி......................= பொன்மணி

          ·         கனகவல்லி...................= பொற்கொடி

          ·         சாமி...................................= பொன்னன்

          ·         தனம்................................= தங்கம்

          ·         தனலட்சுமி....................= பொன்மகள்

          ·         தனபாக்கியம்................= பொற்செல்வி

          ·         தனவேந்தன்.................= பொன்னரசு

          ·         தனராஜ்...........................= பொன்னரசு

          ·         தனசாமி..........................= பொற்செல்வன்

          ·         இரணியன்.....................= பொன்னன்

          ·         கல்யாணம்....................= தங்கமாங்கனி

          ·         கல்யாணசுந்தரம்........= பொன்னழகு

          ·         கல்யாணி.................... = பொன்மகள்

          ·         ஹேமச்சந்திரன்..........= பொன்னிலவன்

          ·         ஹேமலதா.................. = பொற்கொடி

          ·         ஹேமா............................= பொன்னி

          ·         திரவியம்.........................= பொன்னன்

          ·         திரவியராஜு.................= பொன்னரசு

          ·         திரவியசாமி..................= பொன்னையன்

          ·         அபரஞ்சிதா....................= பொற்பாவை

          ·         ருக்குமணி.....................= பொன்மணி

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022}

-------------------------------------------------------------------------------------



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக