பெயர் விளக்கம் – ராஜஸ்ரீ – பெயரின்
பொருள் என்ன ?
------------------------------------------------------------------------------------
பெண் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது
பெயருக்குப் பின்னர் ஸ்ரீ என்னும்
எழுத்தை இணைத்துக் கொண்டால் அக்குழந்தைகள் சிறப்பான எதிர்காலத்தைப் பெறும் என்று ஒரு
நம்பிக்கை பல பெற்றோர்களிடையே இருந்துவருகிறது !
இந்த நம்பிக்கை பலிக்காமல் பல குழந்தைகள்
வளமற்ற குடும்பச் சூழ்நிலையில் அல்லலுற்று வருவதும் நிகழவே செய்கிறது. ஆதாரமற்ற
இந்த நம்பிக்கையை “மூடநம்பிக்கை” என்று சொல்லி அந்தப்
பெற்றோர்களை மனம் நோகச் செய்ய விரும்பவில்லை !
பெயருக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ “ஸ்ரீ” என்னும்
கிரந்த எழுத்தைச் சேர்த்துப் பெயர் சூட்டுதல் ஒரு நாகரிகமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. ஓரெழுத்து ஒருமொழியான “ஸ்ரீ: என்பதற்கு திரு என்பது மட்டுமல்லாமல் திருமகள் (இலக்குமி) என்றும்
பொருள். ஆனால் பெயருடன் இணைந்த ”ஸ்ரீ” என்பதற்கு, திருமகள் (இலக்குமி), அரசி, பெண், மகள் என்றெல்லாம்
பொருள் கூறலாம் !
இவ்வாறு வழக்கிலுள்ள ஒரு பெயர் ராஜஸ்ரீ அல்லது ராஜ்யஸ்ரீ. ராஜ = அரச ; ஸ்ரீ = பெண்; ராஜஸ்ரீ என்றால் அரசப் பெண் அதாவது அரசி என்று பெயர். ராஜ்யஸ்ரீ என்றாலும் அரசி என்றே பொருள் !
வழக்கத்திலுள்ள “ஸ்ரீ” பெயர்களுக்கு
நேரான அல்லது இணையான அல்லது ஒத்த கருத்துள்ள தூய தமிழ்ப் பெயர்களைப் பார்ப்போமா !
------------------------------------------------------------------------------------
- கவிதாஸ்ரீ........................= கவியரசி
- காவ்யாஸ்ரீ......................= காவியச்செல்வி
- சுபஸ்ரீ..............................= நன்மகள்
- சுபாஸ்ரீ............................= நற்செல்வி
- தேவிஸ்ரீ...........................= இறைவி
- பாவனாஸ்ரீ......................= தூயமகள்
- மோகனாஸ்ரீ....................= கணையழகி
- யுவஸ்ரீ..............................= இளவரசி
- ரமாஸ்ரீ.............................= திருமகள்
- ராஜஸ்ரீ.............................= அரசி
- ரூபஸ்ரீ..............................= வடிவழகி
- ரேகாஸ்ரீ...........................= ஒளிமதி
- லட்சுமிஸ்ரீ........................= பூவழகி
- லலிதாஸ்ரீ........................= எழிலரசி
- லாவண்யாஸ்ரீ................= பேரழகி
- வனஜாஸ்ரீ.......................= தாமரைச்செல்வி
- வனிதாஸ்ரீ.......................= திருமகள்
- வாணிஸ்ரீ.........................= சொல்லின்செல்வி
- வித்யாஸ்ரீ........................= கலைமகள்
- விஜயஸ்ரீ..........................= வெற்றிச்செல்வி
- வேணிஸ்ரீ.........................= விண்ணரசி
- ஜெயஸ்ரீ............................= வெற்றிச்செல்வி
- ஸ்ரீநிதி...............................= அன்பரசி
- ஸ்ரீமதி...............................= நிறைமதி
- ஸ்ரீலலிதா.........................= எழிலரசி
------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பெயர்” வலைப்பூ
திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 19]
{02-06-2022}
------------------------------------------------------------------------------------
![]() |
ராஜஸ்ரீ (அரசி) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக