பொருள் புரிந்து பெயர் வையுங்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 28 ஜூலை, 2022

இணைப்பெயர் (54) “வ - வௌ” வில் தொடங்கும் வடமொழிப் பெயரும் இணைத் தமிழ்ப் பெயரும் !

முதல் வௌவரையிலான வடமொழிப் பெயர்கள் !

வழக்கத்தில் உள்ள வடமொழிப் பெயர்களும்

அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்களும்

-------------------------------------------------------------------------------------

வசந்தகுமார்...............................= இளையவேள்

வசந்தன். (காமன்).....................= வில்லாளன்

வரதராஜன்..................................= அருளரசு

வருணன்......................................= கார்வேந்தன்

வள்ளி (வல்லி).............................= கொடி / பூங்கொடி

வனஜா..........................................= தாமரை

வனிதா..........................................= பாவை

வன்மீகனாதன்...........................= புற்றீசன்

வாகீசன்.......................................= நாவரசன்

வாகீஸ்வரி...................................= நாமகள்

வாசகம்........................................= மொழி

வாசகன்.......................................= மொழியார்

வாசன் (வாழ்பவன்)..................= வாணன்

விசாலாட்சி.................................= தடங்கண்ணி

விதுபாலா....................................= இளம்பிறை

விநாயகன்..................................= ஆனைமுகவன்

விமலன் (மாசில்லாதவன்)......= மாசிலாமணி

விமலாதித்தன்...........................= தூயமணி

விமலா.........................................= மாசிலாமங்கை

விருத்தாசலம்.............................= பழமலை

விவேகானந்தன்.........................= அறிவுடைநம்பி

விஜயலட்சுமி...............................= வெற்றித்திருமகள்

விஜயன் (அர்ச்சுனன்) ................= வெற்றிவேந்தன்

விஜயா..........................................= வெற்றிச்செல்வி

விஸ்வநாதன்..............................= வானவரம்பன்

விஸ்வலிங்கம்............................= வானவரம்பன்

விஸ்வாசம் .................................= நம்பிக்கையரசு

வெங்கடகிருஷ்ணன் ................= திருமலைவாணன்

வெங்கடாசலம்...........................= மாதவன்

வேங்கடசுப்ரமணியன்............= குறிஞ்சிவேலன்

வேணுகோபால்..........................= குழலமுதன்

வேதபுரி........................................= திருமறைநம்பி

வேதமூர்த்தி................................= திருமறைச்செல்வன்

வேதரெத்தினம்.........................= மறைமணி

வேதவல்லி .................................= திருமறைச்செல்வி

வேதாசலம்.................................= மறைமலை

வேதையன்.................................= மறைமணி

வேம்பன்......................................= பாண்டியன்

வேம்பையன்..............................= தென்னரசு

வைத்தியநாதன்........................= மருத்துவமணி

வைத்யநாதன்............................= உறைவாணன்

வைத்தியலிங்கம்.......................=உறைவேந்தன்

வையாபுரி (பழநிமலை)..........= குறிஞ்சி வேந்தன்

வைரக்கண்ணு...........................= சுடர்விழி

வைரம்..........................................= ஒளிமணி


----------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப் பெயர்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 12]

{28-07-2022}

-----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக